[28:36]
ஆகவே, மூஸா
அவர்களிடம் நம்முடைய
தெளிவான அத்தாட்சிகளுடன்
வந்தபோது, அவர்கள்; "இது இட்டுக் கட்டப்பட்ட
சூனியமே அன்றி
வேறில்லை இன்னும்
நம்முடைய முன்னோர்களான
நம் மூதாதையர்களிடத்திலும்
இதைக் கேள்விப்பட்டதில்லை" என்று
கூறினார்கள்.
[28:37]
(அப்போது
மூஸா) கூறினார்; "அவனிடமிருந்து
நேர்வழியுடன்
வருபவர் யாரென்றும்; இறுதி(யாக சுவன) வீடு யாருக்காக
உள்ளது என்பதையும்
என் இறைவன் நன்கறிவான்.
நிச்சயமாக அக்கிரமம் செய்வோர்
வெற்றி பெற மாட்டார்கள்."
[28:38]
இன்னும்
ஃபிர்அவ்ன் சொன்னான்; "பிரமுகர்களே!
என்னைத்தவிர உங்களுக்கு
வேறெரு நாயன் இருக்கின்றான்
என்பதாக நான்
அறியவில்லை. ஆதலின், ஹாமானே!
களிமண் மீது எனக்காகத்
தீயைமூட்டி (செங்கற்கள் செய்து)
பிறகு எனக்காக
ஓர் (உயரமான) மாளிகையைக்
கட்டுவாயாக! (அதன்
மேல் ஏறி) நான்
மூஸாவின் இறைவனைப்
பார்க்க வேண்டும்
- மேலும் நிச்சயமாக
நான் இவரை பொய்யர்களில்
நின்றுமுள்ளவர்" என்றே
கருதுகின்றேன்.
[28:39]
மேலும்
அவனும் அவனுடைய படைகளும்
பூமியில் நியாயமின்றிப்
பெருமை அடித்துக்
கொண்டனர், மேலும்
அவர்கள் நம்மிடம்
நிச்சயமாகத் திரும்பக்கொண்டு
வரப்பட மாட்டார்கள்
என்றும் எண்ணிக் கொண்டார்கள்.
[28:40]
ஆகையால், நாம்
அவனையும் அவன் படைகளையும்
பிடித்தோம்; பிறகு
அவர்களைக் கடலில்
(மூழ்கி விடுமாறு)
எறிந்து விட்டோம்; ஆகவே, அக்கிரமக்காரர்களின்
முடிவு என்ன ஆயிற்றென்று
(நபியே!) நீர் கவனித்துக்
கொள்ளும்.
[28:41]
மேலும், (மக்களை
நரக) நெருப்பிற்கு
அழைத்துச் செல்லும்
தலைவர்களாகவே
நாம் அவர்களை ஆக்கியிருந்தோம்; இன்னும், கியாம
நாளன்று அவர்கள்
உதவி செய்யப்படமாட்டார்கள்.
[28:42]
இன்னும், இவ்வுலகில்
அவர்களைச் சாபம்
தொடருமாறு நாம்
செய்தோம்; கியாம
நாளில் அவர்கள்
இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
[28:43]
இன்னும், முந்தைய தலைமுறையார்களை
நாம் அழித்தபின்
திடனாக மூஸாவுக்கு(த்
தவ்றாத்) வேதத்தைக் கொடுத்தோம்
- மனிதர் (சிந்தித்து)
உபதேசம் பெறும்
பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி
காட்டியாகவும்
அருட் கொடையாகவும்
(அது இருந்தது).