[28:44]
மேலும், நாம்
மூஸாவுக்குக் கட்டளைகளைக்
கடமையாக்கிய சமயம்
நீர் (தூர் மலைக்கு)
மேற்குத் திசையில் இருக்கவில்லை
(அந்நிகழ்வைப்)
பார்ப்பவர்களில்
ஒருவராகவும் நீர்
இருக்கவில்லை.
[28:45]
எனினும்
(அவர்களுக்குப்
பின்) நாம்
அநேக தலைமுறையினர்களை
உண்டாக்கினோம்; அவர்கள்மீது
காலங்கள் பல கடந்து விட்டன
அன்றியும் நீர்
மத்யன் வாசிகளிடம்
வசிக்கவுமில்லை
அவர்களுக்கு நம் வசனங்களை
நீர் ஓதிக் காண்பிக்கவுமில்லை
எனினும் நாம் தூதர்களை
அனுப்பி வைப்போராகவே
இருந்தோம்.
[28:46]
இன்னும்
நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர்
தூர் மலையின் பக்கத்தில்
இருக்கவுமில்லை
எனினும் எந்த மக்களுக்கு, உமக்கு
முன்னால் அச்சமூட்டி
எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள்
நல்லுபதேசம் பெறும்
பொருட்டு அவர்களை
அச்சமூட்டி எச்சரிப்பதற்காக
உமக்கு உம் இறைவனிடமிருந்து
அருட்கொடையாக
(இவைக் கூறப்படுகிறது).
[28:47]
அவர்களுடைய
கைகள் செய்து முற்படுத்திய(தீ)வினை
காரணமாக, அவர்களுக்கு
ஏதேனும் சோதனை
வரும்போது அவர்கள்; "எங்கள்
இறைவா! நீ எங்களுக்குத்
தூதர் ஒருவரை அனுப்பிவைத்திருக்க
வேண்டாமா? அப்போது
நாங்கள் உன் வசனங்களை
பின்பற்றி நாங்களும்
முஃமின்களில்
உள்ளவர்களாகியிருப்போமே!" என்று
கூறாதிருக்கும்
பொருட்டும் (உம்மை
அவர்களிடையே தூதராக
அனுப்பினோம்).
[28:48]
எனினும்
(இப்பொழுது) நம்மிடமிருந்து
சத்திய(மார்க்க)ம்
அவர்களிடம் வந்த
போது, "மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது
போன்று இவருக்கு
ஏன் கொடுக்கப்படவில்லை" என்று கேட்கிறார்கள்; இதற்கு
முன்னர், மூஸாவுக்குக்
கொடுக்கப்பட்டதையும்
அவர்(களின் மூதாதையர்)கள்
நிராகரிக்க வில்லையா? இன்னும்
அவர்கள் கூறுகிறார்கள்; (திருக் குர்ஆனும், தவ்ராத்தும்) "ஒன்றையொன்று
உறுதிப்படுத்தும்
இரண்டு சூனிய(மந்திர)ங்களே!" என்று
இன்னும் அவர்கள்
கூறுகிறார்கள்; "நிச்சயமாக
நாங்கள் (இவை) அனைத்தையும்
நிராகரிக்கிறோம்" என்று.
[28:49]
ஆகவே, "நீங்கள் உண்மையாளர்களாக
இருந்தால், இவ்விரண்டையும்
விட நேர்வழிக்காட்டக்
கூடிய வேதத்தை அல்லாஹ்விடமிருந்து
நீங்கள் கொண்டு
வாருங்கள்; நானும் அதைப்பின்பற்றுகிறேன்" என்று
(நபியே!) நீர் கூறும்.
[28:50]
உமக்கு
அவர்கள் பதில் கூறாவிடில், நிச்சயமாக
அவர்கள் தம் மன
இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்
என்று நீர் அறிந்து
கொள்ளும்; இன்னும்
அல்லாஹ்விடமிருந்து
நேர்வழி காட்டியின்றித்
தன் மன இச்சையைப்
பின்பற்றுபவனைவிட, மிக வழி
கெட்டவன் எவன்
இருக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ்
அக்கிரமக்கார
சமூகத்தாருக்கு
நேர்வழி காட்ட
மாட்டான்.