[28:71]
(நபியே!) நீர்
கூறுவீராக "கியாமநாள்
வரை அல்லாஹ் உங்கள்
மீது இரவை நிரந்தரமாக
இருக்கும்படிச்
செய்து விட்டால், உங்களுக்கு(ப்
பகலின்) வெளிச்சத்தைக்
கொண்டுவரக் கூடியவன்
அல்லாஹ்வை அன்றி
நாயன் உண்டா என்பதை
நீங்கள் (சிந்தித்துப்)
பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க
வேண்டாமா?
[28:72]
கியாமநாள்
வரை உங்கள் மீது அல்லாஹ்
பகலை நிரந்தரமாக
இருக்கும்படிச்
செய்து விட்டால், நீங்கள்
அதில் ஓய்வு பெறும்
பொருட்டு உங்களுக்கு
இரவைக் கொண்டு
வரக்கூடியவன்
அல்லாஹ்வையன்றி
நாயன் உண்டா
என்பதை நீங்கள்
(சிந்தித்துப்)
பார்த்தீர்களா? (இவ்வுண்மையை)
நீங்கள் நோக்க வேண்டாமா? என்று
கூறுவீராக!
[28:73]
இன்னும், அவன்
தன் ரஹ்மத்தினால்
உங்களுக்கு இரவையும்
பகலையும் உண்டாக்கினான்; (இரவு)
நீங்கள் அதில் ஓய்வு
பெறும் பொருட்டு, (பகல்)
நீங்கள் அதில்
அவன் அருளைத் தேடும்
பொருட்டும், (உண்டாக்கினான்.
இதற்காக அவனுக்கு)
நன்றி செலுத்துவீர்களாக!
[28:74]
இன்னும்
(அல்லாஹ்) அவர்களை அழைக்கும்
நாளில்; "எனக்கு இணையானவர்கள்
என்று நீங்கள்
எண்ணியிருந்தீர்களே அவர்கள்
எங்கே?" என்று கேட்பான்.
[28:75]
இன்னும், நாம்
ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும்
ஒரு சாட்சியை வைத்துக்
கொண்டு (முஷ்ரிக்குகளை
நோக்கி) "உங்கள்
ஆதாரத்தைக் கொண்டு
வாருங்கள்" என்று
கூறுவோம்; அப்பொழுது அவர்கள்
சத்தியமென்பது
அல்லாஹ்வுக்Nகு சொந்தமென்றும், அவர்கள்
இட்டுக்கட்டியவை யெல்லாம்
அவர்களை விட்டும்
மறைந்துவிடும்
என்றும் அறிந்து
கொள்வார்கள்.
[28:76]
நிச்சயமாக, காரூன்
மூஸாவின் சமூகத்தைச்
சேர்ந்தவனாக இருந்தான்; எனினும்
அவர்கள் மீது அவன்
அட்டூழியம் செய்தான்; அவனுக்கு
நாம் ஏராளமான பொக்கிஷங்களைக்
கொடுத்திருந்தோம்
- நிச்சயமாக அவற்றின்
சாவிகள் பலமுள்ள
ஒரு கூட்டத்தாருக்கும்
பளுவாக இருந்தன
அப்பொழுது அவனுடைய
கூட்டத்தார் அவனிடம்; "நீ (இதனால்
பெருமைகொண்டு)
ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக
(அவ்வாறு) ஆணவம்
கொள்பவர்களை நேசிக்கமாட்டான்" என்று கூறினார்கள்.
[28:77]
மேலும், அல்லாஹ்
உனக்குக் கொடுத்த
(செல்வத்)திலிரு;நது மறுமை
வீட்டைத்தேடிக்
கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை
(உனக்கு விதித்திருப்பதையும்)
மறந்து விடாதே!
அல்லாஹ் உனக்கு
நல்லதைச் செய்திருப்பதைப்
போல், நீயும் நல்லதை
செய்! இன்னும், பூமியில்
குழப்பம் செய்ய விரும்பாதே
நிச்சயமாக அல்லாஹ்
குழப்பம் செய்பவர்களை
நேசிப்பதில்லை
(என்றும் கூறினார்கள்).