[29:7]
ஆகவே, எவர்கள்
ஈமான் கொண்டு நல்ல
அமல்கள் செய்கிறார்களோ
அவர்களுடைய தீங்குகளை
அவர்களை விட்டும்
நிச்சயமாக நீக்கி
விடுவோம்; இன்னும், அவர்கள்
செய்த நன்மைகளுக்கு
அவற்றைவிட மிகக
அழகான கூலியை, நிச்சயமாக
நாம் அவர்களுக்கு
கொடுப்போம்.
[29:8]
தன்
தாய் தந்தையருக்கு
நன்மை செய்யும்படியாக
நாம் மனிதனுக்கு
வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும், (மனிதனே!)
உனக்கு அறிவு இல்லாத
ஒன்றை எனக்கு இணையாக்கும்படி
அவ்விருவரும்
உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும்
கீழ்படிய வேண்டாம்; என்னிடமே
உங்கள் அனைவரின்
மீளுதலும் இருக்கிறது
நீங்கள் செய்து
கொண்டிருந்தவை
பற்றி அப்போது
நான் உங்களுக்கு
அறிவிப்பேன்.
[29:9]
அன்றியும்
எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்களைச்
செய்கிறார்களோ
அவர்களை நல்லடியார்களுடன்
நிச்சயமாக நாம்
சேர்த்து விடுவோம்.
[29:10]
மேலும், மனிதர்களில்
சிலர் "நாங்கள் அல்லாஹ்வின்
மீது நம்பிக்கைக்
கொண்டுள்ளோம்" என்று சொல்கிறார்கள்; எனினும், அவர்களுக்கு
அல்லாஹ்வின் பாதையில்
துன்பம் உண்டானால், மனிதர்களால்
ஏற்படும் அந்த
இம்சையை அல்லாஹ்வின்
வேதனைபோல் கருதி
(உம்மை விட்டும் நீங்கள்
முனைந்து) விடுகிறார்கள்; ஆனால்
உம் இறைவனிடத்திலிருந்து
உதவி வரும்போது "நிச்சயமாக
நாங்கள் உங்களுடனே
தான் இருந்தோம்" என்று
கூறுகிறார்கள். அல்லாஹ்
அகிலத்தாரின்
இதயங்களில் இருப்பவற்றை
நன்கறிந்தவனாக
இல்லையா?
[29:11]
அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை
நிச்சயமாக அல்லாஹ்
நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன்
நிச்சயமாக நன்கறிவான்.
[29:12]
நிராகரிப்பவர்கள்
நம்பிக்கை கொண்டவர்களிடம்; "நீங்கள்
எங்கள் வழியை
(மார்க்கத்தைப்)
பின்பற்றுங்கள்; உங்கள்
குற்றங்களை நாங்கள்
சுமந்து கொள்கிறோம்" என்று
கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள்
தம் குற்றங்களிலிருந்தும்
எதையும் சுமப்பவர்களாக (தாங்குபவர்களாக)
இல்லையே! எனவே
(உங்கள் குற்றங்களை
சுமப்பதற்காகச்
சொல்லும்) அவர்கள்
நிச்சயமாக பொய்யர்களே!
[29:13]
ஆனால்
நிச்சயமாக அவர்கள் தங்களுடைய
(பளுவான பாவச்)
சுமைகளையும், தம் (பளுவான
பாவச்) சுமைகளுடன்
(அவர்கள் வழிகெடுத்தோரின்
பளுவான பாவச்)
சுமைகளையும் சுமப்பார்கள்; கியாம
நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக்
கொண்டிருந்தவை
பற்றி நிச்சயமாக
விசாரிக்கப்படுவார்கள்.
[29:14]
மேலும்; திடனாக
நாம் நூஹை அவருடைய
சமூகத்தாரிடம்
அனுப்பினோம்; ஆக, அவர்கள்
மத்தியில் அவர்
ஐம்பது குறைய ஆயிரம்
ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால்
அவர்கள் அநியாயக்காரர்களாக
இருந்தமையால் அவர்களைப்
பிரளயம் பிடித்துக்
கொண்டது.