[29:15]
(அப்போது)
நாம் அவரையும், (அவருடன்)
கப்பலில் இருந்தோரையும்
காப்பாற்றினோம்; மேலும், அதை உலக
மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும்
ஆக்கினோம்.
[29:16]
இன்னும்
இப்றாஹீமையும்
(தூதராக நாம்
அனுப்பினோம்); அவர்
தம் சமூகத்தாரிடம்; "அல்லாஹ்வை
நீங்கள் வணங்குங்கள்; அவனிடம்
பயபக்தியுடன்
இருங்கள்; நீங்கள்
அறிந்தவர்களாக
இருந்தால், இதுவே
உங்களுக்கு நன்மையுடையதாக
இருக்கும்" என்று
கூறிய வேளையை
(நபியே! நினைவூட்டுவீராக).
[29:17]
அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள்
- மேலும், நீங்கள்
பொய்யைச் சிருஷ்டித்துக்
கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத்
தவிர நீங்கள் வணங்கி
வரும் இவை உங்களுக்கு
ஆகார வசதிகள் அளிக்கச்
சக்தியற்றவை ஆதலால், நீங்கள்
அல்லாஹ்விடமே
ஆகார வசதிகளைத்
தேடுங்கள்; அவனையே
வணங்குங்கள்; அவனுக்கே
நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே
நீ;ங்கள் திரும்பக்
கொண்டுவரப்படுவீர்கள்.
[29:18]
இன்னும்
நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டால்
(தளர்ந்து போவதில்லை
- ஏனெனில்) உங்களுக்கு
முன்னிருந்த சமுதாயத்தவரும்
(அவர்களுக்கு
அனுப்பப்பட்ட
தூதர்களை இவ்வாறே)
பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; ஆகவே, (இறை) தூதரின்
கடமை (தம் தூதை)
பகிரங்கமாக எடுத்துரைப்பதன்றி
(வேறு) இல்லை."
[29:19]
அல்லாஹ்
எவ்வாறு முதலில் படைப்பைத்
துவங்கிப் பிறகு
(அதனை எவ்வாறு)
தன்பால் மீட்டுகிறான்
என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக
இது அல்லாஹ்வுக்கு
மிகவும் சுலபம்.
[29:20]
பூமியில்
நீங்கள் பிரயாணம் செய்து, அல்லாஹ்
எவ்வாறு (முந்திய)
படைப்பைத் துவங்கிப்
பின்னர் பிந்திய
படைப்பை எவ்வாறு
உண்டு பண்ணுகிறான்
என்பதைப் பாருங்கள்; நிச்சயமாக
அல்லாஹ் எல்லாப் பொருட்கள்
மீதும் பேராற்றலுள்ளவன்
என்று (நபியே!) நீர்
கூறுவீராக.
[29:21]
தான்
நாடியவரை அவன்
வேதனை செய்கிறான்; இன்னும்
தான் நாடியவருக்குக்
கிருபை செய்கிறான்
- (இறுதியில்) அவனிடமே
நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
[29:22]
பூமியிலோ, வானத்திலோ
நீங்கள் (அவனை)
இயலாமல் ஆக்குபவர்களல்லர்.
மேலும், உங்களுக்கு
அல்லாஹ்வையன்றி
(வேறு) பாதுகாவலனோ, உதவியாளனோ
இல்லை.
[29:23]
இன்னும், எவர்
அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச்
சந்திப்பதையும்
நிராகரித்தார்களோ, அவர்கள்
தாம் என் ரஹ்மத்தை
விட்டு நிராசையானவர்கள்; மேலும், இ(த்தகைய)வர்களுக்கு
நோவினை செய்யும் வேதனை
உண்டு.