[2:17]
இத்தகையோருக்கு
ஓர் உதாரணம்; நெருப்பை
மூட்டிய ஒருவனின்
உதாரணத்தைப் போன்றது.
அ(ந் நெருப்பான)து
அவனைச் சுற்றிலும்
ஒளி வீசியபோது, அல்லாஹ்
அவர்களுடைய ஒளியைப்
பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க
முடியாத காரிருளில்
அவர்களை விட்டு
விட்டான்.
[2:18]
(அவர்கள்)
செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக
இருக்கின்றனர். எனவே
அவர்கள் (நேரான
வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.
[2:19]
அல்லது, (இன்னும்
ஓர் உதாரணம்;) காரிருளும், இடியும், மின்னலும்
கொண்டு வானத்திலிருந்து
கடுமழை கொட்டும்
மேகம்;(இதிலகப்பட்டுக்கொண்டோர்)
மரணத்திற்கு அஞ்சி
இடியோசையினால், தங்கள்
விரல்களைத் தம்
காதுகளில் வைத்துக்
கொள்கிறார்கள்; ஆனால்
அல்லாஹ் (எப்போதும்
இந்த) காஃபிர்களைச்
சூழ்ந்தனாகவே
இருக்கின்றான்.
[2:20]
அம்மின்னல்
அவர்களின் பார்வைகளைப்
பறித்துவிடப்
பார்க்கிறது. அ(ம்
மின்னலான)து அவர்களுக்கு
ஒளி தரும் போதெல்லாம், அவர்கள்
அதி(ன் துணையினா)ல்
நடக்கிறார்கள்; அவர்களை
இருள் சூழ்ந்து கொள்ளும்
போது (வழியறியாது)
நின்றுவிடுகிறார்கள்; மேலும்
அல்லாஹ் நாடினால் அவர்களுடைய
கேள்விப் புலனையும், பார்வைகளையும்
போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ்
எல்லாவற்றின்
மீதும் பேராற்றல்
உடையவன்.
[2:21]
மனிதர்களே!
நீங்கள் உங்களையும் உங்களுக்கு
முன்னிருந்தோரையும்
படைத்த உங்கள்
இறைவனையே வணங்குங்கள்.
(அதனால்) நீங்கள்
தக்வா (இறையச்சமும், தூய்மையும்)
உடையோராகளாம்.
[2:22]
அ(ந்த
இறை)வனே உங்களுக்காக பூமியை
விரிப்பாகவும், வானத்தை
விதானமாகவும்
அமைத்து, வானத்தினின்றும்
மழை பொழியச்செய்து, அதனின்று
உங்கள் உணவிற்காகக்
கனி வர்க்கங்களை
வெளிவரச் செய்கிறான்; (இந்த
உண்மைகளையெல்லாம்)
நீங்கள் அறிந்து
கொண்டே இருக்கும்
நிலையில் அல்லாஹ்வுக்கு
இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
[2:23]
இன்னும், (முஹம்மது
(ஸல்) என்ற)
நம் அடியாருக்கு
நாம் அருளியுள்ள
(வேதத்)தில் நீங்கள்
சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த
சந்தேகத்தில்)
உண்மை உடையோராகவும்
இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர
உங்கள் உதவியாளர்களை(யெல்லாம்
ஒன்றாக) அழைத்து
(வைத்து)க்கொண்டு இது போன்ற
ஓர் அத்தியாயமேனும்
கொன்டு வாருங்கள்.
[2:24]
(அப்படி)
நீங்கள் செய்யாவிட்டால், அப்படிச்
செய்ய உங்களால்
திண்ணமாக முடியாது, மனிதர்களையும் கற்களையும்
எரிபொருளாகக்
கொண்ட நரக நெருப்பை
அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும்
அவன் வேதத்தையும்
ஏற்க மறுக்கும்)
காஃபிர்களுக்காகவே
அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.