[29:31]
நம்
தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம்
நன்மாராயத்துடன்
வந்தபோது, "நிச்சயமாக
நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில்
நிச்சயமாக இவ்வூரார்
அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்" எனக்
கூறினார்கள்.
[29:32]
நிச்சயமாக
அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே
என்று (இப்றாஹீம்)
கூறினார்; (அதற்கு)
அவர்கள் அதில்
இருப்பவர்கள் யார்
என்பதை நாங்கள்
நன்கறிவோம்; எனவே
நாங்கள் அவரையும்; அவருடைய
மனைவியைத் தவிர, அவர்
குடும்பத்தாரையும்
நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள்
(அழிந்து போவோரில் ஒருத்தியாக)
தங்கி விடுவாள்
என்று சொன்னார்கள்.
[29:33]
இன்னும்
நம் தூதர்கள் லூத்திடம்
வந்த போது அவர்களின்
காரணமாக அவர் கவலை
கொண்டார். மேலும்
அவர்களால் (வருகையால்)
சங்கடப்பட்டார்; அவர்கள்
'நீர்
பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்' என்று
கூறினார்கள். நிச்சயமாக
நாம் உம்மையும்
உன் மனைவியைத்
தவிர உம் குடும்பத்தினரையும்
காப்பாற்றுவோம்; அவள்
(உம்மனைவி அழிந்து
போவோரில் ஒருத்தியாக)
பின் தங்கி விடுவாள்.
[29:34]
நிச்சயமாக, நாங்கள்
இவ்வூரார் மீது, இவர்கள்
செய்து கொண்டிருக்கும்
பாவத்தின் காரணமாக, வானத்திலிருந்து வேதனையை
இறக்குகிறவர்கள்
ஆவோம்.
[29:35]
(அவ்வாறே
அவ்வூரார், அழிந்தனர்)
அறிவுள்ள சமூகத்தாருக்கு
இதிலிருந்தும்
நாம் ஒரு தெளிவான
அத்தாட்சியை விட்டு
வைத்துள்ளோம்.
[29:36]
மேலும், மத்யன்
(ஊராருக்கு) அவர்கள்
சகோதரராகிய ஷுஐபை
(அனுப்பி வைத்தோம்); ஆகவே
அவர்; "என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே
வணங்குங்கள்; இறுதி
நாளை (நம்பி) எதிர்பாருங்கள், மேலும், பூமியில் குழப்பம்
செய்வோராக, (விஷமிகளாகத்)
திரியாதீர்கள்" என்று
கூறினார்.
[29:37]
எனினும்
அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலால்
அவர்களைப் பூகம்பம்
பிடித்துக் கொண்டது
ஆகவே, அவர்கள் தம் வீடுகளில்
அதிகாலையில் (மரித்து)
முகங்குப்புற
விழுந்து கிடந்தார்கள்.
[29:38]
இவ்வாறே, ஆது, ஸமூது (சமூகத்தாரையும்
அழித்தோம்); அன்றியும்
அவர்கள் வசித்த
இடங்களிலிருந்து
(ஒரு சில சின்னங்கள்)
உங்களுக்குத்
தெளிவாக தென்படுகின்றன
ஏனெனில் ஷைத்தான்
அவர்களுடைய (தீச்)செயல்களை
அவர்களுக்கு அழகாகக்
காண்பித்து அவர்கள்
நல்லறிவு படைத்தவர்களாக இருந்தும், அவர்களை
நேர்வழியில் (போக
விடாது) தடுத்து
விட்டான்.