[29:39]
இன்னும்
ஃகாரூனையும், ஃபிர்அவ்ன்னையும், ஹாமானையும்
(அழித்தோம்); திடனாக, அவர்களிடம்
மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன்
வந்தார்; எனினும், (அவற்றை
நிராகரித்து) அவர்கள்
பூமியில் பெருமையடித்து
நின்றார்கள். ஆனால்
அவர்கள் (அழிவிலிருந்து)
தப்பித்தார்களில்லை.
[29:40]
இவ்வாறு, நாம்
ஒவ்வொருவரையும் அவரவர்
செய்த பாவத்தின்
காரணமாகப் பிடித்தோம்; அவர்களில்
சிலர் மீது கடும்புயல் மூலமாக
கல்மாரியை அனுப்பினோம்; அவர்களில்
சிலரை பேரிடி முழக்கம்
பிடித்துக் கொண்டது
அவர்களில் சிலரைப்
பூமியினுள் அழுந்தச்
செய்தோம்; அவர்களில்
சிலரை மூழ்கடித்தோம்; ஆனால்
அல்லாஹ் அவர்களுக்கு
அநியாயம் செய்வதற்காக
இருக்க வில்லை
அவர்கள் தமக்குத் தாமே
அநியாயம் செய்து
கொண்டார்கள்.
[29:41]
அல்லாஹ்
அல்லாதவற்றை(த் தங்களுக்குப்)
பாதுகாவலர்களாக
எடுத்துக் கொள்பவர்களுக்கு
உதாரணம் சிலந்திப் பூச்சியின்
உதாரணம் போன்றது
அது (தனக்காக) ஒரு
வீட்டைக் கட்டியது
ஆனால் நிச்சயமாக
வீடுகளிலெல்லாம்
மிகவும் பலஹீனமானது
சிலந்திப்பூச்சியின்
வீடேயாகும் - இதை அவர்கள்
அறிந்து கொண்டிருப்பார்களாயின்
(தாங்கள் இணையாக
எடுத்துக் கொண்டவற்றின்
பலஹீனத்தை அறிவார்கள்).
[29:42]
நிச்சயமாக
அல்லாஹ்வையன்றி அவர்கள்
எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன்
அறிகிறான் - இன்னும்
அவன் (யாவரையும்)
மிகைத்தவன்; ஞானம்
மிக்கவன்.
[29:43]
இவ்வுதாரணங்களை
நாம் மனிதர்களுக்காக
விளக்கி வைக்கிறோம்
- ஆனால் இவற்றை
சிந்தித்தறிவோர்
தவிர வேறெவரும்
உணர்ந்து கொள்ள
மாட்டார்கள்.
[29:44]
வானங்களையும், பூமியையும் அல்லாஹ்
உண்மையைக் கொண்டே
படைத்துள்ளான்
- நிச்சயமாக இதில்
முஃமின்களுக்கு அத்தாட்சி
இருக்கிறது.
[29:45]
(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு
அறிவிக்கப்பட்டதை
நீர் எடுத்தோதுவீராக
இன்னும் தொழுகையை
நிலை நிறுத்துவீராக
நிச்சயமாக தொழுகை
(மனிதரை) மானக்கேடானவற்றையும்
தீமையையும் விட்டு விலக்கும்.
நிச்சயமாக, அல்லாஹ்வின்
திக்ரு (தியானம்)
மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும்
அல்லாஹ் நீங்கள்
செய்பவற்றை நன்கறிகிறான்.