[29:53]
இன்னும், (மறுமையின்) வேதனையைப்
பற்றி அவர்கள்
உம்மை அவசரப்படுத்துகிறார்கள்; மேலும், (அதற்கெனக்) குறிப்பிட்ட
தவணை ஏற்படுத்தப்படாதிருப்பின்
அவ்வேதனை அவர்களுக்கு
வந்திருக்கும்; எனினும்
(அத்தவணையை) அவர்கள்
உணர்ந்தறிய முடியாதிருக்கும்
நிலையில், அவர்களிடம் அ(வ்வேதனையான)து
திடீரென்று வந்து
சேரும்.
[29:54]
அவ்வேதனையை
அவசரப்படுத்து
மாறு அவர்கள்
உம்மைக் கேட்கிறார்கள்
- ஆனால், நிச்சயமாக
நரகம் காஃபிர்களைச்
சூழ்ந்து கொள்வதாக
இருக்கிறது.
[29:55]
அந்நாளில், அவ்வேதனை அவர்களுக்கு
மேலிருந்தும், அவர்களுடைய
கால்களுக்குக்
கீழிருந்தும்
அவர்களை மூடிக்
கொள்ளும். (அப்போது
இறைவன்) "நீங்கள்
செய்து கொண்டிருந்த(தின் பய)னைச்
சுவைத்துப் பாருங்கள்" என்று
கூறுவான்.
[29:56]
ஈமான்
கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக
என் பூமி விசாலமானது
ஆகையால் நீங்கள்
என்னையே வணங்குங்கள்.
[29:57]
ஒவ்வோர்
ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக்
கூடியதே யாகும்; பின்னர்
நீங்கள் நம்மிடமே
மீள்விக்கப்படுவீர்கள்.
[29:58]
எவர்கள்
ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை
செய்கிறார்களோ
அவர்களை, சதா கீழே
ஆறகள் ஓடிக்கொண்டிருக்கும் சவனபதியிலுள்ள
உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக
நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள்
நிரந்தரமாக (நிலைத்து)
இருப்பார்கள்; (இவ்வாறாக
நற்) செயல்கள் புரிவோரின்
கூலியும் பாக்கியம்
மிக்கதாகவே உள்ளது.
[29:59]
(ஏனெனில்)
அவர்கள் பொறுமையைக் கொண்டார்கள்; மேலும்
தங்கள் இறைவன்
மீதே முழு நம்பிக்கை
வைத்திருக்கிறார்கள்.
[29:60]
அன்றியும்
(பூமியிலுள்ள) எத்தனையோ
பிராணிகள் தங்கள்
உணவைச் சுமந்து
கொண்டு திரிவதில்லை
அவற்றுக்கும் உங்களுக்கும்
அல்லாஹ் தான் உணவளிக்கின்றான்
- இன்னும் அவன்
(யாவற்றையும் செவிமடுப்பவனாகவும்
(நன்கு) அறிபவனாகவும்
இருக்கின்றான்.
[29:61]
மேலும், (நபியே!) "நீர் இவர்களிடத்தில்
வானங்களையும், பூமியையும்
படைத்துச் சூரியனையும்
சந்திரனையும் (தன் அதிகாரத்தில்)
வசப்படுத்திருப்பவன்
யார்?" என்று கேட்டால், "அல்லாஹ்" என்றே
இவர்கள் திட்டமாக
கூறுவார்கள்; அவ்வாறாயின்
அவர்கள் (உண்மையை
விட்டு) எங்கே
திருப்பப்படுகிறார்கள்?
[29:62]
அல்லாஹ்
தன் அடியார்களில்
தான் நாடியவர்களுக்கு
உணவை விசாலமாக்குகிறான், தான்
நாடியவருக்கு
சுருக்கியும் விடுகிறான்; நிச்சயமாக
அல்லாஹ் ஒவ்வொன்றையும்
அறிந்தவன்.
[29:63]
இன்னும், அவர்களிடம்; "வானத்திலிருந்து
நீரை இறக்கி, பிறகு
அதனைக் கொண்டு
இப்பூமியை - அது (காய்ந்து)
மரித்தபின் உயிர்ப்பிப்பவன்
யார்?" என்று நீர்
கேட்பீராகில்; "அல்லாஹ்" என்றே
இவர்கள் திட்டமாகக்
கூறுவார்கள்; (அதற்கு
நீர்) "அல்ஹம்து லில்லாஹ்
- புகழனைத்தும்
அல்லாஹ்வுக்கே
உரியது" என்று கூறுவீராக
எனினும் இவர்களில்
பெரும்பாலோர்
அறிந்துணர மாட்டார்கள்.