[30:33]
மனிதர்களுக்கு
(பசி, நோய், வறுமை, பஞ்சம்
போன்ற ஏதேனும்)
சங்கடம் ஏற்பட்டால்
அவர்கள் தங்கள்
இறைவனிடம் முகம்
திருப்பி, (அதை நீக்கியருள)
அவனிடம் பிரார்த்தனை
செய்கிறார்கள்; பிறகு அவன்
அவர்களுக்கு தன்னிடமிருந்து
ரஹ்மத்தை சுவைக்கச்
செய்தால், அவர்களில்
ஒரு பிரிவினர்
தம் இறைவனுக்கு
இறை வைக்கின்றனர்.
[30:34]
நாம்
அவர்களுக்கு அருளியதற்காக (நன்றி
செலுத்தாமல்) அவர்களை
நிராகரித்துக்
கொண்டிருக்கட்டும்; நீங்கள் சுகமனுபவித்துக்
கொண்டிருங்கள்; விரைவில்
(இதன் விளைவை) நீங்கள்
அறிந்து கொள்வீர்கள்.
[30:35]
அல்லது, அவர்கள்
இணைவைத்(து வணங்குவ)தற்கு
ஆதாரமாக கூறக்கூடிய
ஏதாவது ஓர் அத்தாட்சியை
நாம் அவர்களுக்கு இறக்கி
வைத்திருக்கிறோமா?
[30:36]
இன்னும்
நாம் மனிதர்களை
(நம்) ரஹ்மத்தை
ருசிக்க (அனுபவிக்க)ச்
செய்தால். அவர்கள்
அதைக் கொண்டு மகிழ்கிறார்கள்; ஆனால்
அவர்களுடைய கைகள்
முன்னரே செய்துள்ளதைக்
கொண்டு ஒரு தீங்கு
அவர்களுக்கு சம்பவித்து
விட்டால் அவர்கள்
நிராசைப்பட்டு
விடுகிறார்கள்.
[30:37]
நிச்சயமாக
அல்லாஹ் தான் நாடியோருக்கு
ரிஸ்க்கை - ஆகார
வசதிகளை - விசாலமாக்குகிறான்; (தான் நாடியோருக்குச்)
சுருக்கியும்
விடுகிறான் என்பதை
அவர்கள் பார்க்க
வில்லையா? நிச்சயமாக
ஈமான் கொண்டுள்ள
சமூகத்திற்கு
இதில் அத்தாட்சிகள்
இருக்கின்றன.
[30:38]
ஆகவே, உறவினர்களுக்கு
அவர்கள் பாத்தியதையைக்
கொடுத்து வருவீராக.
அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை
கொடுத்து வருவீராக); எவர்கள்
அல்லாஹ்வின் திருப்
பொருத்தத்தை நாடுகிறார்களோ
அவர்களுக்கு இது
மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம்
(அவ்வாறு கொடுத்து
வருபவர் தாம்)
வெற்றியாளர்களாவார்கள்.
[30:39]
(மற்ற)
மனிதர்களுடைய முதல்களுடன்
சேர்ந்து (உங்கள்
செல்வம்) பெருகும்
பொருட்டு நீங்கள்
வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம்
பெருகுவதில்லை
ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை
நாடி ஜகாத்தாக
எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில்
பெருகும். அவ்வாறு
கொடுப்போர் தாம்
(தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக்
கொண்டவர்களாவார்கள்.
[30:40]
அல்லாஹ்தான்
உங்களைப் படைத்தான்; பின்
உங்களுக்கு உணவு
வசதிகளை அளித்தான்; அவனே
பின்னர் உங்களை மரிக்கச்
செய்கிறான். பிறகு
அவனே உங்களை உயிர்ப்பிப்பான்
-இவற்றில் ஏதேனும் ஒன்றைச்
செய்யக் கூடியதாக
உங்கள் இணை தெய்வங்கள்
இருக்கிறதா? அல்லாஹ்
மிகவும் தூயவன்; அவர்கள்
இணை வைப்பதை விட்டும்
மிகவும் உயர்ந்தவன்.
[30:41]
மனிதர்களில்
கைகள் தேடிக்கொண்ட (தீச்
செயல்களின்) காரணத்தால்
கடலிலும் தரையிலும்
(நாசமும்) குழப்பமும்
தோன்றின் (தீமைகளிலிருந்து)
அவர்கள் திரும்பிவிடும்
பொருட்டு அவர்கள்
செய்தார்களே (தீவினைகள்)
அவற்றில் சிலவற்றை
(இவ்வுலகிலும்)
அவர்கள் சுவைக்கும்படி
அவன் செய்கிறான்.