[2:249]
பின்னர், தாலூத்
படைகளுடன் புறப்பட்ட
போது அவர்; "நிச்சயமாக
அல்லாஹ் உங்களை
(வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு
சோதிப்பான்; யார்
அதிலிருந்து (நீர்)
அருந்துகின்றாரோ
அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத்
தண்ணீர் தவிர யார்
அதில் நின்றும் (அதிகமாக)
நீர் அருந்தவில்லையோ
நிச்சயமாக அவர்
என்னைச் சார்ந்தவர்" என்று கூறினார்; அவர்களில்
ஒரு சிலரைத் தவிர
(பெரும்பாலோர்)
அதிலிருந்து (அதிகமாக நீர்)
அருந்தினார்கள்;. பின்னர்
தாலூத்தும், அவருடன்
ஈமான் கொண்டோரும்
ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும்
அதிகமாக நீர் அருந்தியோர்) "ஜாலூத்துடனும், அவன்
படைகளுடனும் இன்று
போர் செய்வதற்கு
எங்களுக்கு வலுவில்லை" என்று கூறிவிட்டனர்; ஆனால், நாம்
நிச்சயமாக அல்லாஹ்வைச்
சந்திப்போம் என்று
உறுதி கொண்டிருந்தோர், "எத்தனையோ
சிறு கூட்டத்தார்கள், பெருங்
கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள்
மிக்க) அனுமதி
கொண்டு வென்றிருக்கின்றார்கள்;. மேலும்
அல்லாஹ் பொறுமையாளர்களுடன்
இருக்கின்றான்" என்று
கூறினார்கள்.
[2:250]
மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும்
(களத்தில் சந்திக்க)
அவர்கள் முன்னேறிச்
சென்ற போது, "எங்கள் இறைவா!
எங்களுக்குப்
பொறுமையைத் தந்தருள்வாயாக!
எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக!
காஃபிரான இம்மக்கள்
மீது (நாங்கள்
வெற்றியடைய) உதவி செய்வாயாக!" எனக்
கூறி(ப் பிரார்த்தனை
செய்த)னர்.
[2:251]
இவ்வாறு
இவர்கள் அல்லாஹ்வின் (அருள்
மிக்க) அனுமதி
கொண்டு ஜாலூத்தின்
படையை முறியடித்தார்கள்;. தாவூது ஜாலூத்தைக்
கொன்றார்;. அல்லாஹ்
(தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்;. தான்
விரும்பியவற்றையெல்லாம்
அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ்
மக்களில் (நன்மை
செய்யும்) ஒரு
கூட்டத்தினரைக்
கொண்டு (தீமை செய்யும்)
மற்றொரு கூட்டத்தினரைத்
தடுக்காவிட்டால், (உலகம்
சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக
அல்லாஹ் அகிலத்தார்
மீது பெருங்கருணையுடையோனாக
இருக்கிறான்.
[2:252]
(நபியே!) இவை அல்லாஹ்வின் வசனங்களாகும்; இவற்றை
நாம் உண்மையைக்
கொண்டு உமக்கு
ஓதிக் காண்பிக்கின்றோம்;. நிச்சயமாக
நீர் (நம்மால்
அனுப்பப்பட்ட)
தூதர்களில் ஒருவர்
தாம்.