[31:12]
இன்னும், நாம்
லுஃக்மானுக்கு நிச்சயமாக
ஞானத்தைக் கொடுத்தோம். "அல்லாஹ்வுக்கு
நீர் நன்றி செலுத்தும்; ஏனென்றால்
எவன் நன்றி செலுத்துகிறானோ
அவன் தன(து
நன்மை)க்காவே நன்றி செலுத்துகிறான்; இன்னும்
எவன் நிராகரிக்கிறானோ
(அவன் தன்னையே
நட்டப்படுத்திக் கொள்கிறான்)
- நிச்சயமாக அல்லாஹ்
(எவரிடத்தருந்தும்)
தேவையில்லாதவன்; புகழப்படுபவன்".
[31:13]
இன்னும்
லுஃக்மான் தம் புதல்வருக்கு; "என் அருமை
மகனே! நீ அல்லாஹ்வுக்கு
இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல்
மிகப் பெரும் அநியாயமாகும்," என்று
நல்லுபதேசம் செய்து
கூறியதை (நினைவுபடுத்துவீராக).
[31:14]
நாம்
மனிதனுக்கு தன்
பெற்றோர் (இருவருக்கும்
நலம் செய்ய வேண்டியது)
பற்றி வஸிய்யத்துச்
செய்(து போதித்)தோம்; அவனுடைய
தாய் பலஹீனத்தின்
மேல் பலஹீனம் கொண்டவளாக
(கர்ப்பத்தில்)
அவனை சுமந்தாள்; இன்னும்
அவனுக்குப் பால்
குடி மறத்த(லி)ல்
இரண்டு வருடங்கள்
ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும்
உன் பெற்றோர்க்கும்
நன்றி செலுத்துவாயாக
என்னிடமே உன்னுடைய
மீளுதல் இருக்கிறது."
[31:15]
ஆனால், நீ எது
பற்றி அறிவு (ஆதாரம்)
பெற்றவனாக இல்லையோ
அதனை எனக்கு இணை
வைக்குமாறு உன்னை
அவ்விருவரும் வற்புறுத்தினால்
அப்போது நீ அவ்விருவருக்கும்
வழிபட வேணடாம்; ஆனால்
இவ்வுலக வாழ்க்கையில்
அவ்விருவருடனும்
அழகிய முறையில்
உறவு வைத்துக்
கொள்; (யாவற்றிலும்) என்னையே
நோக்கி நிற்போரின்
வழியையே நீ பின்பற்றுவாயாக
- பின்னர் உங்கள் (அனைவருடைய)
மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள்
என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை
(அப்போது) நான்
உங்களுக்கு அறிவிப்பேன்."
[31:16]
(லுஃக்மான்
தம் புதல்வரிடம்) என் அருமை
மகனே! (நன்மையோ, தீமையோ)
அது ஒரு கடுகின்
வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள்
இருந்தாலும் அல்லது
வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே
இருந்தாலும் அல்லாஹ்
அதையும் (வெளியே)
கொண்டு வருவான்; நிச்சயமாக
அல்லாஹ் நுண்ணறிவு
மிக்கவன்; (ஒவ்வொன்றின்
அந்தரங்கத்தையும்)
நன்கறிபவன்.
[31:17]
என்
அருமை மகனே! நீ
தொழுகையை நிலை
நாட்டுவாயாக நன்மையை
ஏவி, தீமையை விட்டும்
(மனிதர்களை) விலக்குவாயாக
உனக்கு ஏற்படும்
கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக்
நிச்சயமாக இதுவே
வீரமுள்ள செயல்களில்
உள்ளதாகும்
[31:18]
(பெருமையோடு)
உன் முகத்தை மனிதர்களை
விட்டும் திருப்பிக்
கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும்
நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங்
கொண்டோர் எவரையும்
நிச்சயமாக அல்லாஹ்
நேசிக்க மாட்டான்.
[31:19]
உன்
நடையில் (மிக வேகமோ, அதிக
சாவதானமோ இல்லாமல்)
நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும்
தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம்
வெறுக்கத்தக்கது நிச்சயமாக
கழுதையின் குரலேயாகும்.