[31:20]
நிச்சயமாக
அல்லாஹ் வானங்களில்
உள்ளவற்றையும், பூமியில்
உள்ளவற்றையும், உங்களுக்கு
வசப்படுத்தி இருக்கிறான்
என்பதையும்; இன்னும்
தன் அருட் கொடைகளை உங்கள்
மீது புறத்திலும், அகத்திலும்
நிரம்பச் செய்திருக்கிறான்
என்பதையும் நீங்கள்
அறியவில்லையா? ஆயினும், மக்களில்
சிலர் இருக்கிறார்கள்; அவர்கள்
போதிய கல்வியறிவில்லாமலும்; நேர்வழி
இல்லாமலும், ஒளிமிக்க
வேதமில்லாமலும்
அல்லாஹ்வைக் குறித்துத்
தர்க்கம் செய்கின்றனர்.
[31:21]
அல்லாஹ்
இறக்கி வைத்த
(வேதத்)தை நீங்கள்
பின்பற்றுங்கள்" என அவர்களுக்குச்
சொல்லப்பட்டால், அவர்கள் "(அப்படியல்ல)!
நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை
எதில் கண்டோமோ, அதைத்
தான் நாங்கள் பின்பற்றுவோம்" என்று கூறுகிறார்கள்.
அவர்களை ஷைத்தான்
கொழுந்து விட்டெரியும்
(நரக) நெருப்பின் வேதனையின்
பக்கம் அழைத்தாலுமா
(பின்பற்றுவர்?)
[31:22]
எவன்
தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின்
பக்கமே திருப்பி, நன்மை
செய்து கொண்டிருக்கிறானோ, அவன்
நிச்சயமாக உறுதியான
கயிற்றை பலமாக
பற்றிப் பிடித்துக்
கொண்டான். இன்னும்
காhயங்களின் முடிவெல்லாம்
அல்லாஹ்விடமேயுள்ளது.
[31:23]
(நபியே!) எவன்
நிராகரிப்பானோ அவனுடைய
குஃப்ரு - நிராகரிப்பு
உம்மை விசனப்படுத்த
வேண்டாம். அவர்களின்
மீளுதல் நம்மிடத்தில்தான்
இருக்கிறது அவர்கள்
என்ன செய்து கொண்டிருந்தார்கள்
என்பதை அப்பொழுது
நாம் அவர்களுக்கு
அறிவிப்போம் -
நிச்சயமாக அல்லாஹ்
இருதயங்களில்
உள்ளவற்றை நன்கறிபவன்.
[31:24]
அவர்களை
நாம் சிறிது சுகிக்கச் செய்வோம்; பின்னர்
நாம் அவர்களை மிகவும்
கடுமையான வேதனையில்
(புகுமாறு) நிர்ப்பந்திப்போம்.
[31:25]
வானங்களையும், பூமியையும் படைத்தவன்
யார்? என்று அவர்களிடம்
நீர் கேட்பீராயின்
அவர்கள், அல்லாஹ்" என்றே
நிச்சயமாக சொல்லுவார்கள்; அல்ஹம்து
லில்லாஹ் - எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே" என்று
நீர் கூறுவீராக்
எனினும், அவர்களில்
பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.
[31:26]
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும்
(யாவும்) அல்லாஹ்வுக்கே
உரியன. நிச்சயமாக, அல்லாஹ் (எவரிடமும்)
தேவையற்றவன்; புகழப்படுபவன்.
[31:27]
மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள
மரங்கள் யாவும்
எழுது கோல்களாகவும், கடல்
(நீர் முழுதும்) அதனுடன்
கூட மற்றும் ஏழு
கடல்கள் அதிகமாக்கப்பட்டு
(மையாக) இருந்த
போதிலும், அல்லாஹ்வின்
(புகழ்) வார்த்தைகள்
முடிவுறா நிச்சயமாக
அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
[31:28]
(மனிதர்களே!) உங்களை படைப்பதும், (நீங்கள்
மரித்த பின்) உங்களை
(உயிர்ப்பித்து)
எழுப்புவதும் ஒருவரைப்
(படைத்து, அவர் மரித்தபின்
உயிர் கொடுத்து
எழுப்புவது) போலன்றி வேறில்லை
நிச்சயமாக அல்லாஹ்
(யாவற்றையும்)
செவியேற்பவன்; உற்று
நோக்குபவன்.