[33:7]
(நபியே!
நம் கட்டளைகளை
எடுத்துக் கூறுமாறு)
நபிமார்(கள்
அனைவர்)களிடமும், (சிறப்பாக)
உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய
குமாரர் ஈஸா ஆகியோரிடமும்
வாக்குறுதி வாங்கிய
போது, மிக்க உறுதியான
வாக்குறுதியையே அவர்களிடம்
நாம் வாங்கினோம்.
[33:8]
எனவே
உண்மையாளர்களாகிய
(அத்தூதர்களிடம்)
அவர்கள் (எடுத்துக்
கூறிய தூதின்) உண்மையை
பற்றி அல்லாஹ்
கேட்பான்; (அவர்களை
நிராகரித்த) காஃபிர்களுக்கு
அல்லாஹ் நோவினை
தரும் வேதனையைச்
சித்தம் செய்திருக்கின்றான்.
[33:9]
முஃமின்களே!
உங்கள் மீதும்
அல்லாஹ் புரிந்திருக்கும்
அருட் கொடையை நினைத்துப் பாருங்கள்; உங்களிடம்
(எதிரிகளின்) படைகள்
வந்த போது (புயல்)
காற்றையும், நீங்கள்
(கண்களால்) பார்க்கவியலா
(வானவர்களின்)
படைகளையும் அவர்கள்
மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள்
செய்வதை அல்லாஹ்
உற்று நோக்குபவனாக
இருக்கிறான்.
[33:10]
உங்களுக்கு
மேலிருந்தும், உங்களுக்குக்
கீழிருந்தும்
அவர்கள் உங்களிடம் (படையெடுத்து)
வந்த போது, (உங்களுடைய)
இருதயங்கள் தொண்டை(க்
குழி முடிச்ச)களை அடைந்து
(நீங்கள் திணறி)
அல்லாஹ்வைப் பற்றி
பலவாறான எண்ணங்களை
எண்ணிக் கொண்டிருந்த
சமயம் (அல்லாஹ்
உங்களுக்கு செய்த
அருள்கொடையை) நினைவு
கூருங்கள்.
[33:11]
அவ்விடத்தில்
முஃமின்கள் (பெருஞ்)
சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான
அதிர்ச்சியினால்
அதிர்ச்சிக்கப்பட்டார்கள்.
[33:12]
மேலும்
(அச்சமயம் நயவஞ்சகர்கள்)
முனாஃபிக்குகளும், எவர்களின்
இருதயங்களில் நோயிருந்ததோ
அவர்களும், அல்லாஹ்வும், அவனுடைய
தூதரும் நமக்கு
ஏமாற்றத்தைத்
தவிர (வேறு) எதையும்
வாக்களிக்கவில்லை" என்று
கூறிய சமயத்தையும்
நினைவு கூருங்கள்.
[33:13]
மேலும், அவர்களில்
ஒரு கூட்டத்தார்
(மதீனாவாசிகளை
நோக்கி) "யஸ்ரிப்
வாசிகளே! (பகைவர்களை எதிர்த்து) உங்களால்
உறுதியாக நிற்க
முடியாது, ஆதலால்
நீங்கள் திரும்பிச்
சென்று விடுங்கள்" என்று
கூறியபோது, அவர்களில்
(மற்றும்) ஒரு பிரிவினர்; "நிச்சயமாக
எங்களுடைய வீடுகள்
பாதுகாப்பற்ற
நிலையில் இருக்கின்றன" என்று
- அவை பாதுகாப்பற்றதாக
இல்லாத நிலையிலும்
- கூறி, (போர்க்களத்திலிருந்து சென்றுவிட)
நபியிடம் அனுமதி
கோரினார்கள் -
இவர்கள் (போர்க்களத்திலிருந்து
தப்பி) ஓடவதைத்
தவிர (வேறெதையும்)
நாடவில்லை.
[33:14]
அதன்
பல பாகங்களிலிருந்தும் அவர்கள்
மீது படைகள் புகுத்தப்பட்டு, குழப்பம்
செய்யும்படி அவர்களிடம்
கேட்கப் பட்டிருக்குமானால், நிச்சயமாக
அவர்கள் (அதை ஏற்று
அவ்வாறே) செய்து
இருப்பார்கள்; அதை (குழப்பத்தை)
சிறிது நேரமே தவிர
தாமதப் படுத்த
மாட்டார்கள்.
[33:15]
எனினும், அவர்கள் (போரிலிருந்து)
புறங்காட்டி ஓடுவதில்லை
என்று அல்லாஹ்விடத்தில்
இதற்கு முன்னர் நிச்சயமாக
வாக்குறுதி செய்திருந்தார்கள்; ஆகவே, அல்லாஹ்விடம்
செய்த வாக்குறுதி பற்றி
(அவர்களிடம்) கேட்கப்படும்.