[2:253]
அத்தூதர்கள்
- அவர்களில் சிலரைச்
சிலரைவிட நாம்
மேன்மையாக்கி
இருக்கின்றோம்; அவர்களில்
சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில்
சிலரைப் பதவிகளில்
உயர்த்தியும்
இருக்கின்றான்;. தவிர
மர்யமுடைய மகன்
ஈஸாவுக்கு நாம்
தெளிவான அத்தாட்சிகளைக்
கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல்
குதுஸி (எனும்
பரிசுத்த ஆத்மாவைக்)
கொண்டு அவருக்கு
உதவி செய்தோம்;. அல்லாஹ்
நாடியிருந்தால், தங்களிடம்
தெளிவான அத்தாட்சிகள்
வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின்
வந்த மக்கள் (தங்களுக்குள்)
சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால்
அவர்கள் வேறுபாடுகள்
கொண்டனர்;. அவர்களில்
ஈமான் கொண்டோரும் உள்ளனர்;. அவர்களில்
நிராகரித்தோரும்
(காஃபிரானோரும்)
உள்ளனர்;. அல்லாஹ் நாடியிருந்தால்
அவர்கள் (இவ்வாறு)
சண்டை செய்து கொண்டிருக்க
மாட்டார்கள்;. ஆனால் அல்லாஹ்
தான் நாடியவற்றைச்
செய்கின்றான்.
[2:254]
நம்பிக்கை
கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும்
இல்லாத அந்த(இறுதித்
தீர்ப்பு) நாள் வருவதற்கு
முன்னர், நாம்
உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து
(நல்வழிகளில்)
செலவு செய்யுங்கள்;. இன்னும், காஃபிர்களாக
இருக்கின்றார்களே
அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.
[2:255]
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய)
நாயன் வேறு இல்லை.
அவன் என்றென்றும்
ஜீவித்திருப்பவன், என்றென்றும்
நிலைத்திருப்பவன்;, அவனை
அரி துயிலே, உறக்கமோ
பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும்
அவனுக்கே உரியன, அவன்
அனுமதியின்றி அவனிடம்
யார் பரிந்துரை
செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப்
பின்னருள்ளவற்றையும்
அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து
எதனையும், அவன்
நாட்டமின்றி, எவரும்
அறிந்துகொள்ள
முடியாது. அவனுடைய
அரியாசனம் (குர்ஸிய்யு)
வானங்களிலும், பூமியிலும்
பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும்
காப்பது அவனுக்குச்
சிரமத்தை உண்டாக்குவதில்லை
- அவன் மிக உயர்ந்தவன்; மகிமை
மிக்கவன்.
[2:256]
(இஸ்லாமிய)
மார்க்கத்தில் (எவ்வகையான)
நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து
நேர்வழி முற்றிலும் (பிரிந்து)
தெளிவாகிவிட்டது.
ஆகையால், எவர் வழி
கெடுப்பவற்றை
நிராகரித்து அல்லாஹ்வின்
மீது நம்பிக்கை
கொள்கிறாரோ அவர்
அறுந்து விடாத
கெட்டியான கயிற்றை நிச்சயமாகப்
பற்றிக் கொண்டார்
- அல்லாஹ்(யாவற்றையும்)
செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும்
இருக்கின்றான்.