[33:23]
முஃமின்களில்
நின்றுமுள்ள மனிதர்கள்
அல்லாஹ்விடம்
அவர்கள் செய்துள்ள
வாக்குறுதியில்
உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில்
சிலர் (ஷஹீதாக
வேண்டும் என்ற)
தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு
சிலர் (ஆர்வத்துடன்
அதை) எதிர் பார்த்துக்
கொண்டு இருக்கிறார்கள்
- (எந்த நிலைமையிலும்)
அவர்கள் தங்கள்
வாக்குறுதியிலிருந்து சிறிதும்
மாறுபடவில்லை.
[33:24]
உண்மையாளர்களுக்கு
அவர்களின் உண்மைக்குரிய
கூலியை அல்லாஹ்
திடமாக அளிப்பான்; அவன்
நாடினால் முனாஃபிக்குகளை வேதனையும்
செய்வான், அல்லது
அவர்களை மன்னிப்பான்
- நிச்சயமாக அல்லாஹ்
மிகவும் மன்னிப்பவன்; மிக்க
கிருபையுடையவன்.
[33:25]
நிராகரிப்பவர்களை
தங்களுடைய கோபத்தில்
(மூழ்கிக்கிடக்குமாறே
அல்லாஹ் அவர்களைத்
திருப்பிவிட்டான்; (ஆதலால் இந்தப்
போரில்) அவர்கள்
ஒரு நன்மையையும்
அடையவில்லை, மேலும்
போரில் முஃமின்களுக்கு
அல்லாஹ் போதுமானவன், மேலும்
அல்லாஹ் பேராற்றலுடையவன்; (யாவரையும்)
மிகைத்தவன்.
[33:26]
இன்னும், வேதக்காரர்களிலிருந்தும்
(பகைவர்களுக்கு)
உதவி புரிந்தார்களே
அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய
கோட்டைகளிலிருந்து
கீழே இறக்கி, அவர்களின்
இருதயங்களில்
திகிலைப் போட்டுவிட்டான்; (அவர்களில்)
ஒரு பிரிவாரை நீங்கள்
கொன்று விட்டீர்கள்; இன்னும் ஒரு பிரிவாரைச்
சிறைப்பிடித்தீர்கள்.
[33:27]
இன்னும், அவன்
உங்களை அவர்களுடைய
நிலங்களுக்கும், அவர்களுடைய
வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும், (இது வரையில்)
நீங்கள் மிதித்திராத
நிலப்பரப்புக்கும் வாரிசுகளாக
ஆக்கி விட்டான்; மேலும்
அல்லாஹ் எல்லாப்
பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.
[33:28]
நபியே!
உம்முடைய மனைவிகளிடம்; "நீங்கள்
இவ்வுலக வாழ்க்கையையும், இதன்
அலங்காரத்தையும்
நாடுவீர்களானால், வாருங்கள்!
நான் உங்களுக்கு
வாழ்க்கைக்கு
உரியதைக் கொடுத்து
அழகிய முறையில் உங்களை
விடுதலை செய்கிறேன்.
[33:29]
ஆனால், நீங்கள்
அல்லாஹ்வையும், அவன்
தூதரையும், மறுமையின்
வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது
உங்களில் நன்மையாளர்களுக்காக
அல்லாஹ் மகத்தான
நற்கூலி நிச்சயமாக
சித்தம் செய்திருக்கிறான் என்றும்
கூறுவீராக!
[33:30]
நபியுடைய
மனைவிகளே! உங்களில் எவரேனும்
பகிரங்கமான மானக்கேடு
செய்வாராயின், அவருக்கு
வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு
மிகவும் சுலபமேயாகும்!