[33:31]
அன்றியும்
உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும்
அவனுடைய தூதருக்கும்
வழிபட்டு, நல்ல
அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம்
நற்கூலியை இருமுறை
வழங்குவோம்; இன்னும்
அவருக்கு கண்ணியமான
உணவையும் சித்தம்
செய்திருக்கிறோம்.
[33:32]
நபியின்
மனைவிகளே! நீங்கள் பெண்களில்
மற்றப் பெண்களைப்
போலல்ல நீங்கள்
இறையச்சத்தோடு
இருக்க விரும்பினால், (அந்நியருடன்
நடத்தும்) பேச்சில்
நளினம் காட்டாதீர்கள்.
ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய்
(தவறான நோக்கம்)
இருக்கின்றதோ, அ(த்தகைய)வன்
ஆசை கொள்வான்; இன்னும்
நீங்கள் நல்ல
பேச்சே பேசுங்கள்.
[33:33]
(நபியின்
மனைவிகளே!) நீங்கள் உங்கள்
வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர்
அஞ்ஞான காலத்தில்
(பெண்கள்) திரிந்து
கொண்டிருந்ததைப்
போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை
முறைப்படி உறுதியுடன்
கடைப்பிடித்து
தொழுங்கள்; ஜகாத்தும்
கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய
தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே!
உங்களை விட்டும்
அசுத்தங்களை நீக்கி, உங்களை
முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே
அல்லாஹ் நாடுகிறான்.
[33:34]
மேலும்
உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே
அல்லாஹ்வின் வசனங்கள்
(அவற்றையும்) ஞான
விஷயங்களையும்
(ஹிக்மத்) நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்
- நிச்சயமாக அல்லாஹ்
(உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி)
சூட்சமமாகத் தெரிந்தவன்; (உங்கள்
செயல்கள் பற்றி)
நன்கறிந்தவன்.
[33:35]
நிச்சயமாக
முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை
கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே
பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்)
உள்ளச்சத்துடன்
இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம்
செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு
நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள்
வெட்கத்தலங்களை
(கற்பைக்) காத்துக்
கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை
அதிகமதிகம் தியானம்
செய்யும் ஆண்களும், பெண்களும்
- ஆகிய இவர்களுக்கு
அல்லாஹ் மன்னிப்பையும்
மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.