[33:55]
(நபியின்
மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய
தந்தையர் முன்பும், தங்கள்
ஆண் மக்கள் முன்பும்
தங்கள் சகோதரர்கள்
முன்பும், தங்கள்
சகோதரர்களின்
ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின்
ஆண்மக்கள் முன்பும், அவர்களின்
பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள்
சொந்தமாக்கிக்
கொண்டவர்கள் முன்பும்
(வருவது) அவர்கள்
மீது குற்றமாகாது
எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப்
பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!)
நிச்சயமாக அல்லாஹ்
எல்லாவற்றுக்கும்
சாட்சியாக இருக்கின்றான்.
[33:56]
இந்த
நபியின் மீது அல்லாஹ் அருள்
புரிகிறான். மலக்குகளும்
அவருக்காக அருளைத்
தேடுகின்றனர்.
முஃமின்களே நீங்களும்
அவர் மீது ஸலவாத்து
சொல்லி அவர் மீது
ஸலாமும் சொல்லுங்கள்.
[33:57]
எவர்கள்
அல்லாஹ்வையும்
அவனுடைய தூதரையும்
நோவினை செய்கிறார்களோ, அவர்களை
நிச்சயமாக அல்லாஹ்
இம்மையிலும் மறுமையிலும்
சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு
இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி
இருக்கின்றான்.
[33:58]
ஈமான்
கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட
பெண்களையும் செய்யாத
(எதையும் செய்ததாகக்)
கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள்
நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான
பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.
[33:59]
நபியே!
நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும்
ஈமான் கொண்டவர்களின்
பெண்களுக்கும், அவர்கள்
தங்கள் தலைமுன்றானைகளைத்
தாழ்த்திக் கொள்ளுமாறு
கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள்
என) அறியப்பட்டு
நோவினை செய்யப்படாமலிருக்க
இது சுலபமான வழியாகும்.
மேலும் அல்லாஹ்
மிக மன்னிப்பவன்; மிக்க
அன்புடையவன்.
[33:60]
முனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில்
நோய் உள்ளவர்களும், மதீனாவில்
பொய்ப்பிரச்சாரம்
செய்து கொண்டிருப்பவர்களும்
(தம் தீச்செயல்களிலிருந்து)
விலகிக் கொள்ளவில்லையானால், அவர்களுக்கு
எதிராக (நடவடிக்கைகள்
எடுப்பதை) உம்மிடம்
நிச்சயமாக சாட்டுவோம். பிறகு
அவர்கள் வெகு சொற்ப(கால)மேயன்றி
அங்கு உமது அண்டை
அயலார்களாக (வசித்திருக்க)
மாட்டார்கள்.
[33:61]
அ(த்தகைய
தீய)வர்கள் சபிக்கப் பட்டவர்களாவார்கள்; அவர்கள்
எங்கே காணப்பட்டாலும்
பிடிக்கப்படுவார்கள்; இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள்.
[33:62]
அல்லாஹ்
ஏற்படுத்திய வழி
- இதற்கு முன்
சென்றவர்களுக்கும்
இதுவே தான்; அல்லாஹ்வின்
(அவ்)வழியில் எவ்வித மாற்றத்தையும்
நீர் காணமாட்டீர்.
[33:63]
(நியாயத்
தீர்ப்புக்குரிய) அவ்வேளையை
பற்றி மக்கள் உம்மைக்
கேட்கின்றனர்; "அதைப்
பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே
இருக்கிறது" என்று
நீர் கூறுவீராக
அதை நீர் அறிவீரா? அது சமீபத்திலும்
வந்து விடலாம்.
[33:64]
நிச்சயமாக
அல்லாஹ் காஃபிர்களைச்
சபித்து, அவர்களுக்காகக்
கொழுந்து விட்டெரியும்
(நரக) நெருப்பைச் சித்தம்
செய்திருக்கின்றான்.