[34:40]
(மலக்குகளை
வணங்கி வந்த) அவர்கள்
அனைவரையும் ஒன்று
கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் "இவர்கள்தானா
உங்களை வணங்கிக்கொண்டு
இருந்தார்கள்" என்று
(அல்லாஹ்) கேட்பான்.
[34:41]
(இதற்கு
மலக்குகள்;) "நீ மிகத்
தூய்மையானவன்; நீயே எஙகள்
பாதுகாவலன்; இவர்கள்
அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை
வணங்கிக் கொண்டிருந்தார்கள்
- இவர்களில் பெரும்பாலோர்
அவர் (ஜின்)கள் மேல் நம்பிக்கை
கொண்டிருந்தார்கள்" என்று
கூறுவார்கள்.
[34:42]
இன்றைய
தினம், உங்களில் சிலர் (உங்களில்
மற்றும்) சிலருக்கு
நன்மையோ, தீமையோ
செய்யச் சக்தியற்றவர்களாவீர்; நீங்கள்
எதைப் பொய்ப்படுத்திக்
கொண்டிருந்தீர்களோ
அந்(நரக) நெருப்பின்
வேதனையைச் சுவைத்துப்
பாருங்கள் என்றும்
அறியாயம் செய்தார்களே
அவர்களிடம் நாம்
கூறுவோம்.
[34:43]
நம்முடைய
தெளிவான வசனங்கள் அவர்களுக்கு
ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்; "இவர்
(ஒரு சாதாரண) மனிதரே அன்றி
வேறில்லை உங்கள்
மூதாதையவர்கள்
வணங்கிக் கொண்டிருந்தவற்றை
விட்டும் உங்களைத்
தடுத்து விடவே
இவர் விரும்புகிறார்" என்று
கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள் "இது இட்டுக்
கட்டப்பட்ட பொய்யேயன்றி
வேறில்லை" என்றும் கூறுகின்றனர்.
மேலும், அல் ஹக்கு
(சத்தியம்; திருக்
குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, "இது வெளிப்படையான
சூனியமேயன்றி
வேறில்லை" என்றும் நிராகரிப்பவர்கள்
கூறுகிறார்கள்.
[34:44]
எனினும்
(இதற்கு முன்) நாம் இவர்களுக்கு
இவர்கள் ஓதக்கூடிய
வேதங்கள் எதையும்
கொடுக்கவில்லை
உமக்கு முன்னர், நாம்
இவர்களிடம் அச்சமூட்டி
செய்பவரையும்
அனுப்பவில்லை.
[34:45]
மேலும்
இவர்களுக்கு முன்னிருந்த
(ஏனைய சமூகத்த)வர்களும்
(இவ்வாறே) பொய்ப்பிக்க
முற்பட்டனர், அன்றியும்
அவர்களுக்குக்
கொடுத்ததில் பத்தில்
ஒன்றைக் கூட இவர்கள்
அடையவில்லை ஆகவே
அவர்கள் என் தூதர்களைப்
பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; அந்த
நிராகரிப்பு (கடின
வேதனையைக் கொண்டு
வருவதாக) எவ்வாறு
இருந்தது (என்பதை
இவர்கள் நினைவு கூரட்டும்)
[34:46]
நான்
உங்களுக்கு உபதேசிப்பது ஒரே ஒரு
விஷயத்தைப் பற்றித்தான்; நீங்கள்
இரண்டிரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ அல்லாஹ்வுக்காக
எழுந்தமர்ந்து
பின்னர் சிந்தித்துப்
பாருங்கள் என்று
(நபியே!) நீர்
கூறும்; உங்கள் நண்பருக்கு
பைத்தியம் எதுவுமில்லை
உங்களுக்கு கடினமான
வேதனை வரவதற்கு
முன்னர் அச்சமூட்டி
எச்சரிக்கை செய்பவரல்லாமல்
அவர் வேறில்லை."
[34:47]
கூறுவீராக "நான் உங்களிடமிருந்து
யாதொரு கூலியையும்
கேட்கவில்லை அது
உங்களுக்கே இருக்கட்டும்; என்னுடைய
கூலி அல்லாஹ்விடமேயன்றி
(உங்களிடம்) இல்லை
-அவன் எல்லாப்
பொருட்கள் மீதும்
சாட்கியாக இருக்கின்றான்."
[34:48]
கூறுவீராக "என்னுடைய இறைவன்
நிச்சயமாக(ப் பொய்மையை
அழித்து) சத்தியத்தை
மேலேற்றுகிறான்; மறைவானவற்றையெல்லாம்
அவன் நன்கறிந்தவன்."