[2:260]
இன்னும், இப்ராஹீம்; "என் இறைவா!
இறந்தவர்களை நீ
எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய்
என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!" எனக்
கோரியபோது, அவன், நீர்
(இதை) நம்ப வில்லையா?" எனக்
கேட்டான்; "மெய்(யாக
நம்புகிறேன்!)
ஆனால் என் இதயம்
அமைதிபெறும் பொருட்டே
(இவ்வாறு கேட்கிறேன்)" என்று
கூறினார்; "(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து
நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம்
திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை
அறுத்து) அவற்றின்
ஒவ்வொரு பாகத்தை
ஒவ்வொரு மலையின்
மீது வைத்து விடும்;. பின், அவற்றைக்
கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப்
பறந்து) வரும்;. நிச்சயமாக
அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன்
என்பதை அறிந்து
கொள்ளும்" என்று
(அல்லாஹ்) கூறினான்.
[2:261]
அல்லாஹ்வின்
பாதையில் தங்கள் செல்வத்தைச்
செலவிடுபவர்களுக்கு
உவமையாவது ஒவ்வொரு
கதிரிலும் நூறு
தானிய மணிகளைக்
கொண்ட ஏழு கதிர்களை
முளைப்பிக்கும்
ஒரு வித்தைப் போன்றது.
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு
(இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும்
அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும்
நன்கறிபவன்.
[2:262]
அல்லாஹ்வின்
பாதையில் எவர் தங்கள்
செல்வத்தைச் செலவிட்ட
பின்னர், அதைத்
தொடர்ந்து அதைச்
சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது
(வேறு விதமாக) நோவினை
செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு
அதற்குரிய நற்கூலி
அவர்களுடைய இறைவனிடத்தில்
உண்டு இன்னும்
- அவர்களுக்கு
எத்தகைய பயமுமில்லை
அவர்கள் துக்கமும்
அடையமாட்டார்கள்.
[2:263]
கனிவான
இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம்
செய்தபின் நோவினையைத்
தொடரும்படிச்
செய்யும் ஸதக்காவை (தர்மத்தை)
விட மேலானவையாகும்;. தவிர
அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்;. மிக்க
பொறுமையாளன்.
[2:264]
நம்பிக்கை
கொண்டவர்களே! அல்லாஹ்வின்
மீதும், இறுதி நாளின்
மீதும் நம்பிக்கை
கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே
தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச்
சொல்லிக் காண்பித்தும், நோவினைகள்
செய்தும் உங்கள்
ஸதக்காவை (தான தர்மங்களைப்)
பாழாக்கி விடாதீர்கள்;. அ(ப்படிச்
செய்ப)வனுக்கு
உவமையாவது, ஒரு வழுக்குப்
பாறையாகும்;. அதன்
மேல் சிறிது மண்
படிந்துள்ளது, அதன்
மீது பெருமளவு
பெய்து (அதிலிருந்த சிறிது
மண்ணையும் கழுவித்)
துடைத்து விட்டது.
இவ்வாறே அவர்கள்
செய்த -(தானத்)திலிருந்து
யாதொரு பலனையும்
அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான
மக்களை நேர் வழியில்
செலுத்துவதில்லை.