[36:41]
இன்னும்
அவர்களுக்கு ஓர் அத்தாட்சி, நாம்
நிச்சயமாக அவர்களுடைய
சந்ததிகளை நிறப்பப்பட்ட
கப்பலில் ஏற்றிச் செல்வதில்
உள்ளது.
[36:42]
இன்னும், அவர்கள்
ஏறிச் செல்வதற்காக
அதைப் போன்ற (பல்வேறு
கலங்களை) நாம்
அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.
[36:43]
அன்றியும்
நாம் நாடினால் அவர்களை
மூழ்கடித்து விடுவோம்; அப்பொழுது
அவர்களைக் காப்பாற்றுவோர்
எவரும் இருக்க
மாட்டார்; மேலும், அவர்கள்
விடுவிக்கப்படவும்
மாட்டார்கள்.
[36:44]
நம்முடைய
கருணையினால் சிறிது காலம்
அவர்கள் சுகிப்பதற்காக
(விட்டு வைக்கப்பட்டாலன்றி),
[36:45]
இன்னும், நீங்கள்
கிருபை செய்யப்பெறும்
பொருட்டு, உங்களுக்குமுன்
இருப்பதையும், உங்களுக்குப்பின் இருப்பதையும்
அஞ்சி நடந்து கொள்ளுங்கள்
என்று அவர்களுக்குக்
கூறப்பட்டாலும்
[36:46]
அவர்களுடைய
இறைவனின் அத்தாட்சிகளில்
எந்த ஓர் அத்தாட்சி
அவர்களிடம் வந்தாலும்
அதனை அவர்கள் புற்ககணிக்காமல்
இருப்பதில்லை.
[36:47]
அல்லாஹ்
உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து
நீங்கள் (அவன்
பாதையில்) செலவு
செய்யுங்கள் என்று அவர்களிடம்
கூறப்பட்டால், "அல்லாஹ்
நாடியிருந்தால்
எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு
நாம் உணவளிப்போமா? நீங்கள்
பகிரங்கமான வழிகேட்டிலேயே
இருக்கின்றீர்கள்" என்று
நிராகரிப்பவர்கள்
ஈமான் கொண்டவர்களைப்
பார்த்துக் கூறுகிறார்கள்.
[36:48]
இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்; "நீங்கள்
உண்மையாளர்களாக
இருப்பின், (மறுமை
பற்றிய) அந்த வாக்குறுதி
எப்பொழுது வந்து
சேரும்?" என்று.
[36:49]
அவர்கள்
ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக்
கொண்டிருப்பதைத்
தவிர வேறில்லை
அவர்கள் வழக்காடிக்
கொண்டிருக்கும் நிலையிலேயே
அது அவர்களைப்
பிடித்துக் கொள்ளும்.
[36:50]
அப்போது
அவர்கள் வஸிய்யத்து சொல்ல
சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம்
மீளவும் மாட்டார்கள்.
[36:51]
மேலும், ஸூர்
ஊதப்படடதும், உடனே
அவர்கள் சமாதிகளிலிருந்து
வெளிப்பட்டுத்
தங்கள் இறைவனிடம்
விரைவார்கள்.
[36:52]
எங்களுடைய
துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து
எங்களை எழுப்பியவர்
யார்? என்று அவர்கள்
கேட்பார்கள்; அர்ரஹ்மான்
வாக்களித்ததும், (அவனுடைய)
தூதர்கள் உண்மையெனக்
கூறியதும் இதுதான்" (என்று
அவர்களுக்குக்
கூறப்படும்).
[36:53]
ஒரே
ஒரு பேரொளி தவிர (வேறொன்றும்)
இருக்காது உடன், அவர்கள்
யாவரும் நம்முன்
கொண்டுவரப்படுவார்கள்.
[36:54]
அன்றியும், அந்நாளில்
எந்த ஓர் ஆத்மாவுக்கும்
ஏதம் அநியாயம்
செய்யப்பட மாட்டாது
இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி
(வேறு எதற்கும்)
கூலி கொடுக்கப்பட
மாட்டீர்கள்.