[37:25]
உங்களுக்கு
என்ன நேர்ந்தது? நீங்கள்
ஏன் ஒருவருக்கொருவர்
(உலகில் செய்தது
போன்று) உதவி செய்து
கொள்ளவில்லை? (என்று கேட்கப்படும்).
[37:26]
ஆனால்
அவர்கள் அந்நாளில் (எதுவும்
செய்ய இயலாது தலை
குனிந்து) கீழ்படிந்தவர்களாக
இருப்பார்கள்.
[37:27]
அவர்களில்
சிலர் சிலரை முன்னோக்கி, ஒருவரை
ஒருவர் கேள்வி
கேட்டு(த் தர்க்கித்துக்)
கொண்டும் இருப்பார்கள்.
[37:28]
(தம் தலைவர்களை
நோக்கி) "நிச்சயமாக
நீங்கள் வலப்புறத்திலிருந்து
(சக்தியுடன்) எங்களிடம் வருகிறவர்களாக
இருந்தீர்கள்"
என்று
கூறுவார்கள்.
[37:29]
("அப்படியல்ல!) நீங்கள் தாம் முஃமின்களாக
- நம்பிக்கை கொண்டோராய்
- இருக்கவில்லை!" என்று அ(த்தலை)வர்கள்
கூறுவர்.
[37:30]
அன்றியும்
உங்கள் மீது எங்களுக்கு
எவ்வித அதிகாரமும்
இருக்கவில்லை
எனினும் நீங்கள்
தாம் வரம்பு கடந்து பாவம்
செய்யும் கூட்டத்தாராக
இருந்தீர்கள்.
[37:31]
ஆகையால், எங்கள்
இறைவனுடைய வாக்கு
எங்கள் மீது உண்மையாகி
விட்டது நிச்சயமாக
நாம் (யாவரும்
வேதனையைச்) சுவைப்பவர்கள்
தாம்!
[37:32]
(ஆம்) நாங்கள்
உங்களை வழிகெடுத்தோம்; நிச்சயமாக
நாங்களே வழிகெட்டுத்தான் இருந்தோம்."
[37:33]
ஆகவே, அந்நாளில்
நிச்சயமாக அவர்கள்
வேதனையில் கூட்டானவர்களாகவே
இருப்பார்கள்.
[37:34]
குற்றவாளிகளை
இவ்வாறு தான் நாம்
நிச்சயமாக நடத்துவோம்.
[37:35]
அல்லாஹ்வைத்தவிர
நாயன் இல்லை என்று
அவர்களுக்குக்
கூறப்பட்டால், மெய்யாகவே
அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.
[37:36]
ஒரு
பைத்தியக்காரப் புலவருக்காக
நாங்கள் மெய்யாக
எங்கள் தெய்வங்களைக்
கைவிட்டு விடுகிறவர்களா? என்றும்
அவர்கள் கூறுகிறார்கள்.
[37:37]
அப்படியல்ல!
அவர் சத்தியத்தையே கொண்டு
வந்திருக்கிறார்; அன்றியும்
(தமக்கு முன்னர்
வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார்.
[37:38]
(இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக
நீங்கள் நோவினை
தரும் வேதனையை
அனுபவிப்பவர்கள்
தாம்.
[37:39]
ஆனால், நீங்கள்
செய்து கொண்டிருந்தவற்றுக்கன்றி
(வேறு) எதற்கும்
நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.
[37:40]
அல்லாஹ்வுடைய
அந்தரங்க சுத்தியான
அடியார்களோ (எனின்)-
[37:41]
அவர்களுக்கு
அறியப்பட்டுள்ள உணவு
அவர்களுக்கு இருக்கிறது.
[37:42]
கனி
வகைகள் (அளிக்கப்படும்), இன்னும்
அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்;
[37:43]
இன்பம்
அளிக்கும் சுவர்க்கங்களில்
-
[37:44]
ஒருவரையொருவர்
முன்னோக்கியவாறு கட்டில்கள்
மீது (அமர்ந்திருப்பார்கள்).
[37:45]
தெளிவான
பானம் நிறைந்த குவளைகள்
அவர்களசை; சுற்றி
கொண்டுவரும்.
[37:46]
(அது) மிக்க
வெண்மையானது அருந்துவோருக்கு
மதுரமானது.
[37:47]
அதில்
கெடுதியும் இராது
அதனால் அவர்கள்
புத்தி தடுமாறுபவர்களும்
அல்லர்.
[37:48]
இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான
பார்வையும், நெடிய
கண்களும் கொண்ட
(அமர கன்னியரும்)
இருப்பார்கள்.
[37:49]
(தூய்மையில்
அவர்கள் சிப்பிகளில்)
மறைக்கப்பட்ட
முத்துக்களைப்
போல் இருப்பார்கள்.
[37:50]
(அப்பொழுது)
அவர்களில் ஒரு சிலர்
சிலரை முன்னோக்கியவாறு
பேசிக் கொண்டிருப்பார்கள்.
[37:51]
அவர்களில்
ஒருவர்; எனக்கு (இம்மையில்)
உற்ற நண்பன் ஒருவன்
இருந்தான் எனக்
கூறுவார்.