[2:265]
அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள்
ஆத்மாக்களை உறுதியாக்கிக்
கொள்ளவும், யார்
தங்கள் செல்வங்களைச் செலவு
செய்கிறார்களோ
அவர்களுக்கு உவமையாவது, உயரமான
(வளமுள்ள) பூமியில்
ஒரு தோட்டம்
இருக்கிறது. அதன்
மேல் பெரு மழை
பெய்கிறது. அப்பொழுது
அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது.
இன்னும், அதன்
மீது அப்படிப்
பெருமழை பெய்யாவிட்டாலும்
பொடி மழையே
அதற்குப் போதுமானது.
அல்லாஹ் நீங்கள்
செய்வதையெல்லாம்
பார்க்கின்றவனாக இருக்கின்றான்.
[2:266]
உங்களில்
யாராவது ஒருவர்
இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம்
பேரீச்ச மரங்களும்,
திராட்சைக்
கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன்
கீழே நீரோடைகள்
(ஒலித்து) ஓடுகின்றன.
அதில் அவருக்கு
எல்லா வகையான கனி
வர்க்கங்களும்
உள்ளன. (அப்பொழுது)
அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது.
அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான
சிறு குழந்தைகள்
தாம் இருக்கின்றன
- இந்நிலையில்
நெருப்புடன் கூடிய
ஒரு சூறாவளிக்
காற்று, அ(ந்தத் தோட்டத்)தை
எரித்து(ச் சாம்பலாக்கி)
விடுகின்றது.
(இதையவர் விரும்புவாரா?) நீங்கள்
சிந்தனை செய்யும்
பொருட்டு அல்லாஹ்
(தன்) அத்தாட்சிகளை
உங்களுக்குத் தெளிவாக
விளக்குகின்றான்.
[2:267]
நம்பிக்கை
கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து
நாம் உங்களுக்கு
வெளிப்படுத்தித் தந்த
(தானியங்கள், கனி வகைகள்
போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே
(தான தர்மங்களில்)
செலவு செய்யுங்கள்;. அன்றியும்
கெட்டவற்றைத்
தேடி அவற்றிலிருந்து சிலவற்றை
(தான தர்மங்களில்)
செலவழிக்க நாடாதீர்கள்;. ஏனெனில்
(அத்தகைய பொருள்களை வேறெவரும்
உங்களுக்குக்
கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக்
கொண்டேயல்லாது அவற்றை
நீங்கள் வாங்க
மாட்டீர்கள்! நிச்சயமாக
அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம்
உரியவனுமாகவும்
இருக்கின்றான்
என்பதை நீங்கள்
நன்கறிந்து கொள்ளுங்கள்.
[2:268]
(தான தர்மங்கள்
செய்வதினால்) வறுமை
(உண்டாகிவிடும்
என்று அதைக்) கொண்டு
உங்களை ஷைத்தான்
பயமுறுத்துகிறான்.; ஒழுக்கமில்லாச்
செயல்களைச் செய்யுமாறும்
உங்களை ஏவுகிறான்;. ஆனால்
அல்லாஹ்வோ, (நீங்கள்
தான தருமங்கள்
செய்தால்) தன்னிடமிருந்து
மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க
செல்வமும் (கிடைக்கும்
என்று) வாக்களிக்கின்றான்;. நிச்சயமாக
அல்லாஹ் விசாலமான
(கொடையுடைய)வன்; யாவற்றையும்
நன்கறிபவன்.
[2:269]
தான்
நாடியவருக்கு
அவன் ஞானத்தைக்
கொடுக்கின்றான்; (இத்தகு)
ஞானம் எவருக்குக்
கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா
நன்மைகள் கொடுக்கப்பட்டவராக
நிச்சயமாக ஆகி
விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர்
தவிர வேறு யாரும்
இதைச் சிந்தித்துப்
பார்ப்பதில்லை.