Sâd
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[38:1]
ஸாத்.
(நல்லுபதேசங்களின்) நினைவுறுத்தலைக்
கொண்ட இக்குர்ஆன்
மீது சத்தியமாக.
[38:2]
ஆனால், நிராகரிப்பவர்களோ பெருமையிலும், மாறுபாட்டிலும்
(ஆழ்ந்து) கிடக்கின்றனர்.
[38:3]
இவர்களுக்கு
முன்னர் எத்தனையோ தலைமுறைகளை
நாம் அழித்திருக்கின்றோம்; அப்போது, அவர்கள்
தப்பி ஓட வழியில்லாத நிலையில்
(உதவி தேடிக்) கூக்குரலிட்டனர்.
[38:4]
அன்றியும்
தங்களிடமிருந்தே அச்சமூட்டி
எச்சரிப்பவர்
தங்களிடம் வந்ததைப்
பற்றி ஆச்சரியமடைந்தனர் "இவர் ஒரு சூனியக்காரப்
பொய்யர்!" என்றும்
காஃபிர்கள் கூறினர்.
[38:5]
இவர்
(எல்லாத்) தெய்வங்களையும்
ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர்
ஆச்சரியமான விஷயமே!
(என்றும் கூறினர்).
[38:6]
(இவரை விட்டும்
விலகிச்) செல்லுங்கள். உங்கள்
தெய்வங்களை உறுதியுடன்
பற்றிக் கொள்ளுங்கள்.
நிச்சயமாக இதில்
(இவரது பிரச்சாரத்தில்)
ஏதோ (சுயநலம்) நாடப்படுகிறது" என்று
அவர்களின் தலைவர்கள்
(கூறிச்)
சென்றனர்.
[38:7]
வேறு
(எந்த) சமுதாயத்திலும்
நாம் இது (போன்று)
கேள்விப்பட்டதில்லை இது (இவருடைய)
கற்பனையேயன்றி
வேறில்லை (என்றும்).
[38:8]
நம்மில், இவர்
பேரில்தான் நினைவுறுத்தும்
நல்லுபதேசம் இறக்கப்பட்டு விட்டதோ?" (என்றும்
கூறுகிறார்கள்.) அவ்வாறல்ல!
அவர்கள் எனது போதனையில் சந்தேகத்தில்
இருக்கின்றனர்
அவ்வாறல்ல! இன்னும்
அவர்கள் என் வேதனையை அனுபவித்ததில்லை.
[38:9]
அல்லது, யாவரையும் மிகைத்தவனும்
மிகப்பெருங் கொடையாளியுமாகிய
உமது இறைவனின்
கிருபைக் கருவூலங்கள்
- அவர்களிடம்
இருக்கின்றனவா,
[38:10]
அல்லது
வானங்களுடையவும், பூமியினுடையவும்
அவ்விரண்டிற்கும்
இடையேயும் இருப்பவற்றின்
மீதுள்ள ஆட்சி அவர்களிடம்
இருக்கிறதா? அவ்வாறாயின்
அவர்கள் (ஏணி போன்ற)
சாதனங்களில் ஏறிச் செல்லட்டும்.
[38:11]
ஆனால்
இங்கிருக்கும் படையினரும்
(முன் தலைமுறைகளில்)
முறியடிக்கப்பட்ட
ஏனைய கூட்டங்களைப்
போலவே ஆவார்கள்.
[38:12]
(இவ்வாறு)
இவர்களுக்கு முன் இருந்த
நூஹுடைய சமூகத்தாரும், ஆது(சமூகத்தாரு)ம், முளைகளுடைய
ஃபிர்அவ்னும்
நம் தூதர்களைப்
பொய்ப்பித்தனர்.
[38:13]
(இவ்வாறு)
'ஸமூது'ம் லூத்துடைய சமூகத்தவரும், (மத்யன்)
தோப்பு வாசிகளும்
(பொய்யாக்கினார்கள்); இவர்கள் (எல்லோரும்
முன் தலைமுறைகளில்
முறியடிக்கப்பட்ட)
கூட்டத்தினர்
ஆவார்கள்.
[38:14]
இவர்கள்
ஒவ்வொருவரும்
(நம்) தூதர்களைப்
பொய்ப்பிக்க முற்படாமல்
இல்லை எனவே என்னுடைய
தண்டனை (அவர்கள்
மீது) உறுதியாயிற்று.
[38:15]
இன்னும்
இவர்களும் ஒரே
ஒரு பேரொளியைத்
தவிர (வேறெதனையும்)
எதிர் பார்க்கவில்லை.
அதில் தாமதமும்
இராது.
[38:16]
எங்கள்
இறைவா! கேள்வி
கணக்குக் கேட்கப்படும்
நாளுக்கு முன்னரே, எங்கள்
(வேதனையின்) பாகத்தை
துரிதப்படுத்தி(க் கொடுத்து)
விடுவாயாக என்றும்
(ஏளனமாகக்) கூறுகின்றனர்.