[38:62]
இன்னும், அவர்கள்; "நமக்கு
என்ன நேர்ந்தது? மிகக்
கெட்ட மனிதர்களிலுள்ளவர்கள்
என்று நாம் எண்ணிக்
கொண்டிருந்தோமே, அவர்களை
(நரகத்தில்) ஏன்
காணவில்லை?
[38:63]
நாம்
அவர்களைப் பரிகாசம் செய்து
கொண்டிருந்தோமா? அல்லது
(அவர்களைக் காணமுடியாதவாறு)
அவர்களை விட்டும்
நம் பார்வைகள்
சருகி விடடனவா? என்று
கூறுவர்.
[38:64]
நிச்சயமாக
இது தான் உண்மை. நரகவாசிகள்
(இவ்வாறு தான்)
ஒருவரோடு ஒருவர்
தர்க்கம் செய்து
கொள்வார்கள்.
[38:65]
(நபியே!) நீர்
கூறுவீராக "நான் அச்சமூட்டி
எச்சரிக்கை செய்பவனே, அன்றியும்
ஏகனும், (யாவரையும்) அடக்கியாளபவனுமாகிய
அல்லாஹ்வைத் தவிர
நாயன் இல்லை.
[38:66]
(அவனே)
வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்குமிடையே
உள்ளவற்றுக்கும்
இறைவனாக இருக்கின்றான்; அவன் (யாவரையும்)
மிகைத்தவன்; மிகவும்
மன்னிப்பவன்.
[38:67]
(நபியே?) கூறுவீராக "(நான் உங்களுக்கு
எடுத்துரைக்கும்)
இது மகத்தான செய்தியாகும்.
[38:68]
நீங்களோ
அதைப் புறக்கணித்தவர்களாக
இருக்கிறீர்கள்.
[38:69]
மேலான
கூட்டத்தார் தர்க்கித்துக்
கொண்டது பற்றி
எனக்கு ஒன்றும்
தெரியாது.
[38:70]
நிச்சயமாக
நாம் பகிரங்கமாக அச்சமூட்டி
எச்சரிக்கை செய்பவன்
என்பதற்காக அல்லாமல்
எனக்கு வஹீ அறிவிக்கப்படவில்லை.
[38:71]
(நபியே!
நினைவு கூர்வீராக!) "நிச்சயமாக
நாம் களிமண்ணிலிருந்து
மனிதனைப் படைக்க
இருக்கின்றேன்" என்று
உம்முடைய இறைவன்
கூறிய வேளையில்;
[38:72]
நான்
அவரைச் செவ்வைப்படுத்தி, எனது
ஆவியிலிருந்து
அவருக்குள் ஊதிய
பொழுது அவருக்கு
நீங்கள் விழுந்து
ஸுஜூது செய்யுங்கள்
(எனக் கூறியதும்);
[38:73]
அது
சமயம் மலக்குகள்
யாவரும் ஸுஜூது
செய்தார்கள்.
[38:74]
இப்லீஸைத்
தவிர அவன் பெருமை அடித்தவனாக
(நம் கட்டளையை
மறுத்த) காஃபிர்களில்
(ஒருவனாக) ஆகிவிட்டான்.
[38:75]
இப்லீஸே!
நான் என்னுடைய கைகளால்
படைத்தவருக்கு
ஸுஜூது செய்வதை
விட்டும் உன்னைத்தடுத்தது
எது? பெருமையடிக்கிறாயா? அல்லது
நீ உயர்ந்தவர்களில்
(ஒருவனாக) ஆகிவிட்டாயா? என்று (அல்லாஹ்)
கேட்டான்.
[38:76]
நானே
அவரைவிட மேலானவன்; (ஏனெனில்)
என்னை நீ நெருப்பிலிருந்து
படைத்தாய்; ஆனால்
அவரையோ நீ களிமண்ணிலிருந்து
படைத்தாய் என்று
(இப்லீஸ்) கூறினான்.
[38:77]
(அப்போது
இறைவன்) "இதிலிருந்து
நீ வெளியேறு! ஏனெனில்
நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாகி விட்டாய்" எனக் கூறினான்.
[38:78]
இன்னும், நிச்சயமாக
நியாயத் தீர்ப்பு
நாள்வரை உன்மீது
என் சாபம் இருக்கும்
(எனவும் இறைவன்
கூறினான்).
[38:79]
இறைவனே!
அவர்கள் (இறந்து) எழுப்பப்படும்
நாள்வரை எனக்கு
அவகாசம் கொடுப்பாயாக
என்று அவன் கேட்டான்.
[38:80]
நிச்சயமாக
நீ அவகாசம் சொடுக்கப்பட்டவர்களில்
உள்ளவனே என (அல்லாஹ்)
கூறினான்.
[38:81]
குறிப்பிட்டகாலத்தின் நாள்வரையில்
(உனக்கு அவகாசம்
உண்டு எனவும் கூறினான்.
[38:82]
அப்பொழுது "உன் கண்ணியத்தின்
மீது சத்தியமாக, நிச்சயமாக
நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்" என்று
(இப்லீஸ்) கூறினான்.
[38:83]
(எனினும்)
அவர்களில் அந்தரங்க சுத்தியான
உன் அடியார்களைத்
தவிர (என்றான்).