[39:68]
ஸூர்
(எக்காளம்) ஊதப்பட்டால் உடன்
வானங்களில் உள்ளவர்களும், பூமியில்
உள்ளவர்களும்
- அல்லாஹ் நாடியவர்களைத் தவிர
- மூர்ச்சித்து
விடுவார்கள்; பிறகு
அதில் மறு தடவை
ஊதப்பட்டதும்
உடன் அவர்கள்
யாவரும் எழுந்து, எதிர்
நோக்கி நிற்பார்கள்.
[39:69]
மேலும், பூமி
தன் இறைவனுடைய ஒளியைக்
கொண்டு பிரகாசிக்கும்; (அவர்களுடைய)
குறிப்பேடு (அவர்கள்
முன்) வைக்கப்படும்; இன்னும், நபிமார்களும், சாட்சிகளும்
கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே
நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்.
அன்றியும் அவர்கள்
(சிறிதும்) அநியாயம்
செய்யப்பட மாட்டார்கள்.
[39:70]
ஒவ்வொரு
மனிதனும் தான் செய்ததற்குரிய
கூலியை முழுமையாகப்
பெறுவான்; மேலும், அவன், அவர்கள்
செய்தவற்றை நன்கறிந்தவன்.
[39:71]
(அந்நாளில்)
நிராகரித்தவர்கள் கூட்டம்
கூட்டமாக நரகத்திற்கு
இழுத்துக் கொண்டு
வரப்படுவார்கள்; அவர்கள்
அங்கே வந்தவுடன்
அதன் வாசல்கள்
திறக்கப்படும்; அதன் காவலர்கள்
அவர்களை நோக்கி "உங்களிலிருந்து
(அல்லாஹ்வின்)
தூதர்கள், உங்கள்
இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு
ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை
நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப்
பற்றி உங்களை அச்சமூட்டி
எச்சரிக்கை செய்பவர்களாகவும்
உங்களிடம் வரவில்லையா?" என்று
கேட்பார்கள்; (இதற்கு
அவர்கள்) "ஆம் (வந்தார்கள்)" என்று
கூறுவார்கள்; எனினும்
காஃபிர்களுக்கு
வேதனை பற்றிய வாக்கு
உண்மையாகி விட்டது.
[39:72]
நரகத்தின்
வாயில்களுள் நுழைந்து
விடுங்கள்; என்றென்றும்
அதில் தங்கிவிடுங்கள்
என்று (அவர்களுக்குக்) கூறப்படும்; பெருமை
அடித்துக் கொண்டிருந்தோருடைய
தங்குமிடம் மிகவும்
கெட்டது.
[39:73]
எவர்
தம் இறைவனுக்கு பயபக்தியுடன்
நடந்து கொண்டார்களோ
அவர்கள் கூட்டங்கூட்டமாக
சுவர்க்கத்தின்பால் கொண்டு
வரப்படுவார்கள்; அங்கு
அவர்கள் வந்ததும், அதன்
வாசல்கள் திறக்கப்படும்; அதன்
காவலர்கள் அவர்களை
நோக்கி "உங்கள் மீது
சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம்
பெற்றவர்கள்; எனவே
அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும்
அதில் தங்கிவிடுங்கள்" (என்று
அவர்களிடம் கூறப்படும்).
[39:74]
அதற்கு
(சுவர்க்கவாசிகள்); "அல்ஹம்து
லில்லாஹ்! அவன்
தன் வாக்குறுதியை
எங்களுக்கு உண்மையாக்கி
வைத்து, சுவர்க்கத்தில்
நாம் விரும்பும்
இடமெல்லாம் சென்றிருக்க
(அப்) பூமியை எங்களுக்கு உரிமையாக்கி
வைத்தான்" என்று
கூறுவார்கள். எனவே
நன்மை செய்தோரின்
கூலி (இவ்வாறு) நன்மையாகவே
இருக்கிறது.