[40:8]
எங்கள்
இறைவனே! நீ அவர்களுக்கு
வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள்
மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள்
சந்ததியார்களிலும்
நன்மை செய்தோரையும்
பிரவேசிக்கச் செய்வாயாக.
நிச்சயமாக நீ தான்
(யாவரையும்) மிகைத்தவன்; ஞானம்
மிக்கவன்.
[40:9]
இன்னும், அவர்களைத்
தீமைகளிலிருந்து
காப்பாயாக! அந்நாளில்
நீ யாரை தீமைகளிலிருந்து
காத்துக் கொள்கிறாயோ, அவர்களுக்கு
நிச்சயமாக நீ அருள்
புரிந்து விட்டாய்
- அதுவே மகத்தான
வெற்றியாகும்" (என்றும்
கூறுவர்).
[40:10]
நிச்சயமாக நிராகரிப்பவர்களிடம்; "இன்னு
நீங்கள் உங்கள்
ஆன்மாக்களைக்
கோபித்துக் கொள்வதைவிட
அல்லாஹ்வுடைய
கோபம் மிகப் பெரியதாகும்; ஏனென்றால்
நீங்கள் நம்பிக்கையின்
பால் அழைக்கப்பட்ட
போது (அதை) நிராகரித்து
விட்டீர்களே" என்று
அவர்களிடம் கூறப்படும்.
[40:11]
அதற்கவர்கள்; "எங்கள் இறைவனே!
நீ எங்களை இருமறை
மரணமடையச் செய்தாய்; இருமறை
நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால்
நாங்கள் (இப்பொழுது)
எங்கள் பாவங்களை
ஒப்புக் கொண்டோம் - எனவே
(இதிலிருந்து தப்பி)
வெளியேர ஏதும்
வழியுண்டா?" எனக்
கூறுவர்.
[40:12]
(பதில்
கூறப்படும்;) "அதற்குக் காரணம்
அல்லாஹ் ஒருவனே
(வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்)
என்று அழைக்கப்பட்ட
போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு
(எதையும்)
இணையாக்கப்பட்டால்
(அதன் மீது) நீங்கள்
நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு
மிக்க மேலானவனும், மகாப்
பெரியவனுமான அல்லாஹ்வுக்கே
உரியது."
[40:13]
அவனே
தன் அத்தாட்சிகளை உங்களுக்குக்
காண்பிக்கிறான்; உங்களுக்கு
வானத்திலிருந்து
உணவையும் இறக்கிவைக்கிறான்
- எனவே அவனையே முன்னோக்கி
நிற்பவர்களைத்
தவிர (வேறு
யாரும்) நல்லுணர்வு
பெறமாட்டார்கள்.
[40:14]
ஆகவே, காஃபிர்கள்
வெறுத்த போதிலும், நீங்கள்
முற்றிலும் அவனுக்கே
வழிபட்டு மார்க்கத்தில்
பரிசுத்தத்துடன் அல்லாஹ்
ஒருவனையே (பிரார்த்தித்து)
அழையுங்கள்.
[40:15]
(அவனே)
அந்தஸ்துகளை உயர்த்துபவன்; அர்ஷுக்குரியவன்; சந்திப்புக்குரிய
(இறுதி) நாளைப்பற்றி அச்சமூட்டி
எச்சரிக்கை செய்வதற்காக
தன் அடியார்களில்
தான் நாடியவர்கள்
மீது கட்டளையை
வஹீ மூலம் இறக்கி
வைக்கிறான்.
[40:16]
அந்நாளில்
அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய
எந்த விஷயமும்
அல்லாஹ்வுக்கு
மறைந்ததாக இருக்காது அந்நாளில்
ஆட்சி யாருக்குடையதாக
இருக்கும் - ஏகனாகிய, அடக்கியாளும்
வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே
யாகும்.