[40:26]
மேலும்
ஃபிர்அவ்ன் கூறினான்; "மூஸாவை
கொலை செய்ய என்னை
விட்டு விடுங்கள்!
இன்னும் இவர் தம்முடைய
இறைவனை அழை(த்துப்
பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக
இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது
இப்பூமியில் குழப்பத்தை
வெளியாக்குவார்
என்று நான் அஞ்சுகிறேன்" என்று.
[40:27]
மூஸா
கூறினார்; "கேள்வி கணக்குக்
கேட்கப்படும்
நாள் மீது நம்பிக்கை
கொள்ளாத, பெருமையடிக்கும் எல்லோரையும்
விட்டு, என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய
இறைவனாகவும் இருப்பவனிடம் நிச்சயமாக
நான் பாதுகாவல்
தேடுகிறேன்."
[40:28]
ஃபிர்அவ்னின்
குடும்பத்தாரில் தம் ஈமானை
மறைத்து வைத்திருந்த
ஒரு நம்பிக்கை
கொண்டவர் கூறினார்; "என் இறைவன்
அல்லாஹ்வே தான்!" என்று
ஒரு மனிதர் கூறுவதற்காக
அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும்
அவர் மெய்யாகவே
உங்கள் இறைவனிடமிருந்து
தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம்
கொண்டு வந்துள்ளார்.
எனவே அவர் பொய்யராக
இருந்தால், அப்பொய்
அவருக்கே (கேடு)
ஆகும்; ஆனால் அவர்
உண்மையாளராக இருந்தால், அவர்
உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்)
உங்களை வந்தடையுமே!
நிச்சயமாக அல்லாஹ்
வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில்
செலுத்தமாட்டான்."
[40:29]
என்னுடைய
சமூகத்தார்களே!
இன்று ஆட்சி
உங்களிடம்தான்
இருக்கிறது நீங்கள்
தாம் (எகிப்து)
பூமியில் மிகைத்தவர்களாகவும்
இருக்கின்றீர்கள்; ஆயினும்
அல்லாஹ்வின் தண்டனை
நமக்கு வந்து விட்டால், நமக்கு
உதவி செய்பவர்
யார்? என்றும் கூறினார்)
அதற்கு "நான் (உண்மை
எனக்) காண்பதையே
உங்களுக்கு நான்
காண்பிக்கிறேன்; நேரான
பாதையல்லாது (வேறு)
எதையும் நான் உங்களுக்கு
காண்பிக்கவில்லை" என ஃபிர்அவ்ன்
கூறினான்.
[40:30]
நம்பிக்கை
கொண்டிருந்த அவர் இன்னும்
கூறினார்; "என்னுடைய
சமூகத்தாரே! (அழிந்து
போன மற்ற) கூட்டத்தினர்களின்
நாட்களைப் போன்றவை
உங்கள் மீது வந்து
விடுமே என்று நான் நிச்சயமாக
பயப்படுகிறேன்."
[40:31]
நூஹுடைய
சமூகத்திற்கும், இன்னும்
'ஆது', 'ஸமூது'டைய சமூகத்திற்கும், அவர்களுக்குப்
பின்னுள்ளவர்களுக்கும்
உண்டான நிலையைப்
போன்று (உங்களுக்கு நிகழ்ந்து
விடுமோ எனப் பயப்படுகிறேன்); ஆனால்
அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம்
செய்ய நாடமாட்டான்
(என்றும்).
[40:32]
என்னுடைய
சமூகத்தாரே! உங்கள்
மீது அழைக்கப்படும்
(தீர்ப்பு) நாளைப்
பற்றியும் நான்
பயப்படுகிறேன்.
[40:33]
அல்லாஹ்வை
விட்டும் உங்களைக்
காப்பாற்றுபவர்
எவருமில்லாத நிலையில் நீங்கள்
பின் வாங்கும்
நாள் (அது) அன்றியும்
அல்லாஹ் யாரைத்
தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ, அவனுக்கு
நேர்வழி காட்டுவோர்
எவருமில்லை.