[40:50]
உங்கள்
ரஸூல்கள் (தூதர்கள்) உங்களிடம்
தெளிவான அத்தாட்சிகளுடன்
வரவில்லையா? என (அக்காவலாளிகள்)
கேட்பார்கள். "ஆம்! நிச்சயமாக" என அவர்கள்
பதில் கூறுவார்கள். "அவ்வாறாயின் நீங்களே பிரார்த்தனை
செய்து கொள்ளுங்கள்"
என்று
அவர்கள் கூறுவர். ஆனால்
காஃபிர்களின் பிரார்த்தனை
வழி கேட்டிலில்லாமல்
இல்லை.
[40:51]
நிச்சயமாக, நாம்
நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான்
கொண்டவர்களுக்கும், இவ்வுலக
வாழ்க்கையிலும், சாட்சிகள்
நிலைபெறும் நாளிலும்
உதவி செய்வோம்.
[40:52]
அந்நாளில், அநியாயக்காரர்களுக்கு
அவர்கள் புகழ்
கூறுதல் பயனளிக்காது
- அவர்களுக்கு லஃனத்தும்
(சாபமும்) உண்டு
தீய இருப்பிடமும்
அவர்களுக்குண்டு.
[40:53]
நிச்சயமாக
மூஸாவுக்கு நேர்வழி (காட்டும்
வேதத்தை) நாம்
அளித்தோம் - அன்றியும்
இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு
வாரிசாக்கினோம்.
[40:54]
(அது) நேரான
வழிகாட்டியாகவும் அறிவுடையோருக்கு
நல்லுபதேசமாகவும்
இருந்தது.
[40:55]
ஆகவே, நீர்
பொறுமையுடன் இருப்பீராக.
நிச்சயமாக அல்லாஹ்வின்
வாக்குறுதி உறுதியுடையதாகும்.
உம் பாவத்திற்காக
மன்னிப்புக் கோருவீராக
மாலையிலும் காலையிலும்
உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ்
(துதி) செய்து கொண்டு
இருப்பீராக!
[40:56]
நிச்சயமாக
எவர்கள் தங்களிடம் வந்த
அல்லாஹ்வுடைய
வசனங்களைப்பற்றி
எந்த ஆதாரமுமின்றித்
தர்க்கம் செய்கின்றார்களோ, அவர்களுடைய
இருதயங்களில்
பெருமை தவிர (வேறு
எதுவும்) இல்லை ஆனால்
அ(ப் பெருமையான)தை
அவர்கள் அடையவும்
மாட்டார்கள்; ஆகவே
(நபியே!) நீர் அல்லாஹ்விடமே
பாதுகாவல் தேடுவீராக!
நிச்சயமாக அவன், யாவற்றையும்
செவியேற்பவன், பார்ப்பவன்.
[40:57]
நிச்சயமாக
வானங்களையும், பூமியையும்
படைப்பது, மனிதர்களைப்
படைப்பதை விட மிகவும்
பெரிதாகும் - எனினும் மனிதர்களில்
பெரும்பாலோர்
அறிய மாட்டார்கள்.
[40:58]
குருடரும், பார்வையுடையோரும் சமமாகார்
அவ்வாறே, ஈமான்
கொண்டு ஸாலிஹான
(நல்ல) அமல்கள்
செய்வோரும், தீயோரும் சமமாக
மாட்டார்கள்; உங்களில்
சொற்பமானவர்களே
(இதைக் கொண்டு)
நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.