[40:67]
அவன்தான்
உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின்
இந்திரியத்திலிருந்தும்
பின் அலக் என்னும்
நிலையிலிருந்தும் (உருவாக்கி)
உங்களைக் குழந்தையாக
வெளியாக்குகிறான்; பின்
நீங்கள் உங்கள் வாலிபத்தை
அடைந்து , பின்னர்
முதியோராகுகிறீர்கள்; இதற்கு
முன்னர் இறந்து விடுவோரும்
உங்களில் இருக்கின்றனர்
- இன்னும் நீங்கள்
ஒரு குறிப்பிட்ட
தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து)
நீங்கள் உணர்வு
பெறும் பொருட்டு
(இதை அறிந்து கொள்ளுங்கள்).
[40:68]
அவனே
உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச்
செய்கிறான். ஆகவே
அவன் ஒரு காரியத்தை(ச்
செய்ய)த் தீர்மானித்தால்; 'ஆகுக!' என்று
அதற்குக் கூறுகிறான்.
உடன் அது ஆகிவிடுகிறது.
[40:69]
அல்லாஹ்வின்
வசனங்களைப் பற்றித்
தர்க்கம் செய்பவர்களை
நீங்கள் பார்க்கவில்லையா? எவ்வாறு
அவர்கள் (சத்தியத்தை
விட்டும்) திருப்பப்படுகின்றனர்?
[40:70]
எவர்
இவ்வேதத்தையும், நம்முடைய (மற்ற)
தூதர்கள் கொண்டு
வந்ததையும் பொய்ப்பிக்கிறார்களோ
அவர்கள் விரைவிலேயே (உண்மையை)
அறிவார்கள்.
[40:71]
அவர்களுடைய
கழுத்துகளில் மோவாய்க்கட்டைகள்
வரை அரிகண்டங்களுடன்
விலங்குகளுடனும்
இழுத்துக் கொண்டு வரப்பட்டு
[40:72]
கொதிக்கும்
நீரிலும், பிறகு (நரக)த்
தீயிலும் கரிக்கப்படுவார்கள்.
[40:73]
பிறகு
அவர்களுக்குச்
சொல்லப் படும்; "(அல்லாஹ்வையன்றி,) நீங்கள்
(அவனுக்கு) இணைவைத்துக்
கொண்டிருந்தவை எங்கே?" என்று.
[40:74]
அல்லாஹ்வையன்றி
(நீங்கள் இணைவைத்துக்
கொண்டிருந்தவை
எங்கே என்று கேட்கப்படும்); "அவை எங்களை விட்டும்
மறைந்து விட்டன
அன்றியும் முன்னர்
நாங்கள் (அல்லாஹ்வைத்
தவிர எதையும்) அழைத்துக்
கொண்டிருக்கவில்லையே!" என்று
கூறுவார்கள். இவ்வாறுதான் காஃபிர்களை
அல்லாஹ் வழி கெடச்
செய்கிறான்.
[40:75]
இது, நீங்கள்
பூமியில் நியாயமின்றிப்
(பெருமையடித்து)
மகிழ்ந்து பூரித்துக்
கொண்டிருந்தீர்களே
(அதற்கான தண்டனையாகும்).
[40:76]
நீங்கள்
நரகத்தின் வாயில்களுள்
அதில் என்றென்றும்
தங்குபவர்களாக
- பிரவேசியுங்கள்" (என்று
கூறப்படும்) . எனவே, பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின்
தங்குமிடம் மிகவும்
கெட்டது.
[40:77]
ஆகவே, (நபியே!)
நீர் பொறுமையுடன்
இருப்பீராக நிச்சயமாக
அல்லாஹ்வின் வாக்குறுதி
உண்மையானது; அவர்களுக்கு
வாக்களிக்கப்பட்ட
சிலவற்றை, நாம்
உமக்குக் காண்பித்தாலும்
அல்லது அதற்கு
முன்னரே நிச்சயமாக
நாம் உம்மை மரணமடையச்
செய்தாலும், அவர்கள்
நம்மிடமே கொண்டுவரப்படுவார்கள்.