[41:12]
ஆகவே, இரண்டு
நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக
அவன் ஏற்படுத்தினான்
ஒவ்வொரு வானத்திற்கும்
அதற்குரிய கடமை இன்னதென
அறிவித்தான் இன்னும், உலகத்திற்கு
சமீபமான வானத்தை
நாம் விளக்குகளைக் கொண்டு
அலங்கரித்தோம்
இன்னும் அதனைப்
பாதுகாப்பாகவும்
ஆக்கினோம் இது
யாவரையும் மிகைத்தவனும், ஞானம்
மிக்கோனுமாகிய
(இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.
[41:13]
ஆகவே, அவர்கள்
புறக்கணித்து விடுவார்களாயின், "ஆது, ஸமூது
(கூட்டத்தாரு)க்கு
உண்டான (இடி முழக்கம், புயல்)
கொண்ட வேதனையை
நான் உங்களுக்கு
அச்சுறுத்துகின்றேன்" என்று
(நபியே!) நீர்
கூறுவீராக!.
[41:14]
அல்லாஹ்வையன்றி
(வேறு) எதனையும்
நீங்கள் வணங்காதீர்கள்
என்று அவர்களுக்கு
முன்னாலும், பின்னாலும் அவர்களிடம்
தூதர்கள் வந்த
போது "எங்கள் இறைவன்
நாடியிருந்தால்
அவன் மலக்குகளை(த்
தூதர்களாக) இறக்கியிருப்பான்.
ஆகவேதான், நீங்கள்
எதனைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ
அதனை நாங்கள் நிச்சயமாக
நிராகரிக்கிறோம்" என்று சொன்னார்கள்.
[41:15]
அன்றியும்
ஆது(க் கூட்டத்தார்) பூமியில்
அநியாயமாகப் பெருமையடித்துக்
கொண்டு, "எங்களை விட
வலிமையில் மிக்கவர்கள்
யார்?" என்று கூறினார்கள்
- அவர்களைப் படைத்த
அல்லாஹ் நிச்சயமாக
அவர்களை விட வலிமையில்
மிக்கவன் என்பதை
அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும்
அவர்கள் நம் அத்தாட்சிகளை
மறுத்தவாறே இருந்தார்கள்.
[41:16]
ஆதலினால், இவ்வுலக
வாழ்வில் அவர்கள்
இழிவு தரும் வேதனையைச்
சுவைக்கும்படிச்
செய்ய, கெட்ட நாட்களில்
அவர்கள் மீது
ஒரு கொடிய புயல்
காற்றை அனுப்பினோம்
மேலும், மறுமையிலுள்ள
வேதனையோ மிகவும் இழிவுள்ளதாகும்
அன்றியும் அவர்கள்
(எவராலும்) உதவி
செய்யப்பட மாட்டார்கள்.
[41:17]
ஸமூது
(கூட்டத்தாருக்கோ)
நாம் அவர்களுக்கு
நேரான வழியைக்
காண்பித்தோம், ஆயினும், அவர்கள்
நேர்வழியைக் காட்டிலும்
குருட்டுத்தனத்தையே
நேசித்தார்கள்.
ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(பாவத்)தின்
காரணமாக, இழிவான
வேதனையாகிய இடி
முழக்கம் அவர்களைப்
பிடித்துக் கொண்டது.
[41:18]
ஆனால், ஈமான்
கொண்டு பயபக்தியுடன்
இருந்தவர்களை
நாம் ஈடேற்றினோம்.
[41:19]
மேலும், அல்லாஹ்வின்
பகைவர்கள் (நரகத்)தீயின்
பால் ஒன்று திரட்டப்படும்
நாளில், அவர்கள் (தனித்
தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்.
[41:20]
இறுதியில், அவர்கள்
(அத்தீயை) அடையும்
போது, அவர்களுக்கு
எதிராக அவர்களுடைய
காதுகளும், அவர்களுடைய
கண்களும், அவர்களுடைய
தோல்களும் அவை
செய்து கொண்டிருந்தவை
பற்றி சாட்சி கூறும்.