[41:30]
நிச்சயமாக
எவர்கள் "எங்கள்
இறைவன் அல்லாஹ்தான்" என்று
கூறி, (அதன் மீது)
உறுதியாக நிலைத்து
நின்றார்களோ, நிச்சயமாக
அவர்கள்பால் மலக்குகள்
வந்து, "நீங்கள் பயப்படாதீர்கள்
கவலையும் பட வேண்டாம்
- உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக்
கொண்டு மகிழ்ச்சி
பெறுங்கள்" (எனக்
கூறியவாறு) இறங்குவார்கள்.
[41:31]
நாங்கள்
உலக வாழ்விலும், மறுமையிலும்
உங்களுக்கு உதவியாளர்கள் மேலும்
(சுவர்க்கத்தில்)
உங்கள் மனம் விரும்பியதெல்லாம்
அதில் உங்களுக்கு இருக்கிறது
- அதில் நீங்கள்
கேட்பதெல்லாம்
உங்களுக்குக்
கிடைக்கும்.
[41:32]
மிகவும்
மன்னிப்பவன், மிக்க
கிருபையுடையவனிடமிருந்துள்ள
விருந்தாகும்" (இது என்று
கூறுவார்கள்).
[41:33]
எவர்
அல்லாஹ்வின் பக்கம் (மக்களை)
அழைத்து, ஸாலிஹான
(நல்ல) அமல்கள்
செய்து "நிச்சயமாக
நான் (அல்லாஹ்வுக்கு
முற்றிலும் வழிபட்ட)
முஸ்லிம்களில்
நின்றும் உள்ளவன்
என்று கூறுகின்றாரோ, அவரைவிட
சொல்லால் அழகியவர்
யார்?" (இருக்கின்றார்?)
[41:34]
நன்மையும்
தீமையும் சமமாக மாட்டா, நீங்கள்
(தீமையை) நன்மையைக்
கொண்டே தடுத்துக்
கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும்
உமக்கிடையே, பகைமை
இருந்ததோ, அவர்
உற்ற நண்பரே போல்
ஆகிவிடுவார்.
[41:35]
பொறுமையாக
இருந்தார்களே அவர்கள்
தவிர வேறு யாரும்
அதை அடைய மாட்டார்கள்
மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள்
தவிர, வேறு யாரும்
அதை அடைய மாட்டார்கள்.
[41:36]
உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து
ஏதேனும் ஊசாட்டம்
(தீயதைச் செய்ய)
உம்மைத் தூண்டுமாயின், உடனே
அல்லாஹ்விடம்
காவல் தேடிக் கொள்வீராக!
நிச்சயமாக அவன்
(யாவற்றையும்) செவியேற்பவன்
நன்கறிபவன்.
[41:37]
இரவும், பகலும்
சூரியனும், சந்திரனும்
அவனுடைய அத்தாட்சிகளில்
உள்ளவைதாம். ஆகவே, நீங்கள்
அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக
இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும்
ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப்
படைத்தவனாகிய
அல்லாஹ்வுக்கே
ஸுஜூது செய்யுங்கள்.
[41:38]
ஆனால்
(அல்லாஹ்வை வணங்காது எவரேனும்)
பெருமையடித்தவர்களாக
இருப்பின் (அவனுக்கு
நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள்
(வானவர்கள்) இரவிலும்
பகலிலும் அவனை
தஸ்பீஹு செய்து
(துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்
அவர்கள் (அதில்)
சோர்வடைவதுமில்லை.