[41:47]
(இறுதித்
தீர்ப்பின்) வேளைக்குரிய
ஞானம் அவனுக்கு
சொந்தமானது இன்னும், அவன் அறியாமல்
பழங்களில் எதுவும்
அவற்றின் பாளைகளிலிருந்து
வெளிப்படுவதில்லை
(அவன் அறியாதது)
எந்தப் பெண்ணும்
சூல் கொள்வதுமில்லை
பிரசவிப்பதுமில்லை
(இறுதித் தீர்ப்புக்கான) அந்நாளில்
அவன் "எனக்கு இணையாக்கப்பட்டவை
எங்கே?" என்று அவர்களிடம் கேட்பான்
அப்போது அவர்கள் "எங்களில்
எவருமே (அவ்வாறு)
சாட்சி கூறுபவர்கள் இல்லை" என்று
நாங்கள் உனக்கு
அறிவித்துவிடுகிறோம்" என்று
கூறுவார்கள்.
[41:48]
அன்றியும், முன்னால்
அவர்கள் (தெய்வங்கள்
என) அழைத்துக்
கொண்டிருந்தவை
அவர்களை விட்டும்
மறைந்துவிடும்.
எனவே அவர்களுக்குப்
புகலிடமில்லை
என்பதை அவர்கள்
அறிந்து கொள்வார்கள்.
[41:49]
மனிதன்
(நம்மிடம் பிரார்த்தனை செய்து)
நல்லதைக் கேட்பதற்குச்
சோர்வடைவதில்லை
ஆனால் அவனைக் கெடுதி
தீண்டுமாயின் அவன்
மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான்.
[41:50]
எனினும்
அவனைத் தீண்டியிருந்த கெடுதிக்குப்
பின் நாம் அவனை
நம் ரஹ்மத்தை
- கிருபையைச் சுவைக்கச்
செய்தால், அவன் "இது எனக்கு
உரியதே யாகும்
அன்றியும் (விசாரணைக்குரிய)
வேளை ஏற்படுமென நான்
நினைக்கவில்லை; நான்
என்னுடைய இறைவனிடம்
திருப்பி அனுப்பப்பட்டாலும், நிச்சயமாக அவனிடத்தில்
எனக்கு நன்மையே
கிடைக்கும்" என்று
திடமாகச் சொல்கிறான்.
ஆகவே காஃபிர்கள்
செய்தவற்றை அவர்களுக்கு
நிச்சயமாக நாம்
தெரிவிப்போம்
மேலும் நாம் அவர்களை
நிச்சயமாக, கடுமையான
வேதனையைச் சவைக்கச்
செய்வோம்.
[41:51]
அன்றியும், மனிதனுக்கு
நாம் அருள்
புரிந்தால் அவன்
(நன்றியுணர்வின்றி)
நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான்
- ஆனால் அவனை ஒரு
கெடுதி தீண்டினால்
நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான்.
[41:52]
(இந்த வேதம்) அல்லாஹ்விடமிருந்துள்ளதாக
இருந்தும், இதை நீங்கள்
நிராகரித்தால், உங்கள்
நிலை என்னவாகும்
தூரமான விரோதத்திலுள்ளவர்(களாகிய உங்)களை
விட, அதிக
வழிகேடன் யார் என்பதை
நீங்கள் பார்க்கவில்லையா? என்று
(நபியே!) நீர் கேளும்.
[41:53]
நிச்சயமாக
(இவ்வேதம்) உண்மையானது
தான் என்று அவர்களுக்குத்
தெளிவாகும் பொருட்டு
நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்)
பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும்
சீக்கிரமே நாம்
அவர்களுக்குக் காண்பிப்போம்
(நபியே!) உம் இறைவன்
நிச்சயமாக எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது
உமக்குப் போதுமானதாக
இல்லையா?
[41:54]
அறிந்து
கொள்க நிச்சயமாக அவர்கள்
தங்கள் இறைவனைச்
சந்திப்பது குறித்துச்
சந்தேகத்தில்
இருக்கிறார்கள் அறிந்து
கொள்க நிச்சயமாக
அவன் எல்லாப் பொருட்களையும்
சூழ்ந்து (அறிந்தவனாக) இருக்கிறான்.