Ash-shûrâ
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[42:1]
ஹா, மீம்.
[42:2]
ஐன், ஸீன், காஃப்.
[42:3]
(நபியே!) இது போன்றே
அல்லாஹ் உமக்கும், உமக்கு
முன் இருந்தவர்(களாகிய
நபிமார்)களுக்கும்
வஹீ அறிவிக்கின்றான்; அவனே (யாவரையும்)
மிகைத்தவன்; ஞானம்
மிக்கோன்.
[42:4]
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும்
அவனுக்கே (சொந்தமானவையாகும்!)
மேலும் அவன் மிகவும் உயர்ந்தவன், மகத்தானவன்.
[42:5]
அவர்களுக்கு
மேலிருந்து வானங்கள்
பிளந்து விடலாம்; ஆனால்
மலக்குகள் தங்களுடைய
இறைவனின் புகழைக்
கொண்டு தஸ்பீஹு
செய்து, உலகில் உள்ளவர்களுக்காக
மன்னிப்புத் தேடுகின்றனர்
அறிந்து கொள்க!
நிச்சயமாக அல்லாஹ்வே
மிகவும் மன்னப்பவன்; மிக்க
கிருபையுடையவன்.
[42:6]
அவனையன்றி(த்
தங்களுக்கு வேறு) பாதுகாவலர்களை
எடுத்துக் கொண்டார்களே
அவர்களை அல்லாஹ்
கவனித்தவனாகவே இருக்கின்றான்; நீர்
அவர்கள் மேல் பொறுப்பாளர்
அல்லர்.
[42:7]
அவ்வாறே
நகரங்களின் தாய்க்கும், (மக்காவுக்கும்
அதனைச் சுற்றியுள்ளவற்றுக்கும்
அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், எவ்வித
சந்தேகமுமின்றி
(யாவரும்) ஒன்று
சேர்க்கப்படும் நாளைப்பற்றி
அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், அரபி
பொழியிலான இந்த
குர்ஆனை நாம் உமக்கு
வஹீஅறிவிக்கிறோம்; ஒரு கூட்டம்
சுவர்க்கத்திலும்
ஒரு கூட்டம் நரகிலும் இருக்கும்.
[42:8]
அல்லாஹ்
நாடியிருந்தால், நிச்சயமாக
அவர்கள் (யாவரையும்)
அவன் ஒரே உம்மத்தாக
- சமுதாயமாக ஆக்கியிருப்பான்; எனினும்
அவன் தான் நாடியவர்களைத்
தன்னுடைய ரஹ்மத்தில்
- கிருபையில் - நுழைவிப்பான்; அநியாயக்காரர்களுக்குப்
பாதுகாவலர்களோ, உதவிபுரிபவர்களோ
இல்லை.
[42:9]
(நபியே!) அவர்கள்
அல்லாஹ்வை அன்றி
(வேறு) பாதுகாவலர்களை
எடுத்துக் கொண்டார்களா? ஆனால்
அல்லாஹ்வோ அவன்
தான் பாதுகாவலனாக
இருக்கின்றான், அவனே இறந்தோரை
உயிர்ப்பிக்கிறான்
- அவனே எல்லாவற்றின்
மீதும் ஆற்றலுடையவன்.
[42:10]
நீங்கள்
எந்த விஷயத்தில் கருத்து
வேற்றுமை கொண்டிருக்கிறீர்களோ, அதன்
தீர்ப்பு அல்லாஹ்விடமே
இருக்கிறது - அ(த்தகைய
தீர்ப்பு வழங்குப)வன்
தான் அல்லாஹ்
- என்னுடைய இறைவன்; அவன்
மீதே நான் முற்றும்
நம்பிக்கை வைக்கிறேன்; அன்றியும்
அவன் பக்கமே நான்
திரும்புகிறேன்.