[42:23]
ஈமான்
கொண்டு (ஸாலிஹான)
நல்ல அமல்கள்
செய்துவரும் தன்
அடியார்களுக்கு
அல்லாஹ் நன்மாராயங்
கூறுவதும் இதுவே (நபியே!)
நீர் கூறும்; "உறவினர்கள்
மீது அன்பு கொள்வதைத்
தவிர, இதற்காக நான்
உங்களிடம் யாதொரு
கூலியும் கேட்கவில்லை!" அன்றியும், எவர்
ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு
நாம் அதில் பின்னும்
(பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக
அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை
ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்.
[42:24]
அல்லது
(உம்மைப் பற்றி) அவர்கள்; "அவர்
அல்லாஹ்வின் மீது
பொய்யை இட்டுக்
கட்டிக் கூறுகிறார்" என்று
சொல்கிறார்களா? அல்லாஹ்
நாடினால் அவன்
உம் இருதயத்தின்
மீது முத்திரையிட்டிருப்பான்; அன்றியும்
அல்லாஹ் பொய்யை
அழித்து, தன் வசனங்களைக் கொண்டு
உண்மையை உறுதிப்படுத்துகிறான்; நிச்சயமாக
நெஞ்சங்களிலிருப்பதை
அவன் மிக அறிந்தவன்.
[42:25]
அவன்தான்
தன் அடியார்களின் தவ்பாவை
- பாவ மன்னிப்புக்
கோறுதலை - ஏற்றுக்
கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை
மன்னிக்கிறான்.
இன்னும், நீங்கள்
செய்வதை அவன் நன்கறிகிறான்.
[42:26]
அன்றியும்
ஈமான் கொண்டு ஸாலிஹான
(நல்ல) அமல் செய்பவர்(களின்
பிரார்த்தனை)களையும்
ஏற்று அவர்களுக்குத் தன் அருளை
அதிகப்படுத்துகிறான்; இன்னும், நிராகரிப்பவர்களுக்கு
கடுமையான வேதனையுண்டு.
[42:27]
அல்லாஹ்
தன் அடியார்களுக்கு, உணவு
(மற்றும் வசதிகளை)
விரிவாக்கி விட்டால், அவர்கள்
பூமியியல் அட்டூழியம் செய்யத்
தலைப்பட்டு விடுவார்கள்; ஆகவே
அவன், தான் விரும்பிய
அளவு கொடுத்து வருகின்றான்; நிச்சயமாக
அவன் தன் அடியார்களை
நன்கறிபவன்; (அவர்கள்
செயலை) உற்று நோக்குபவன்.
[42:28]
அவர்கள்
நிராசையான பின்னர் மறையை
இறக்கி வைப்பவன்
அவனே மேலும் அவன்
தன் ரஹ்மத்தை
(அருளை)ப் பரப்புகிறான்; இன்னும்
அவனே புகழுக்குரிய
பாதுகாவலன்.
[42:29]
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், அவையிரண்டிலும்
கால்நடைகள் (முதலியவற்றைப்)
பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய
அத்தாட்சிகளில்
உள்ளவையாகும்
- ஆகவே, அவன் விரும்பியபோது
அவற்றை ஒன்று சேர்க்க
பேராற்றலுடையவன்.
[42:30]
அன்றியும்
தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள்
கரங்கள் சம்பாதித்த
(காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை
அவன் மன்னித்தருள்கின்றான்.
[42:31]
இன்னும், நீங்கள்
பூமியில் (எங்கு
தஞ்சம் புகுந்தாலும்)
அவனை இயலாமல் ஆக்குபவர்கள்
இல்லை மேலும், உங்களுக்கு
அல்லாஹ்வைத் தவிர, பாதுகாவலனோ, உதவிபுரிபவனோ
இல்லை.