[42:45]
மேலும், சிறுமைப்பட்டுத்
தலை கவிழ்ந்தவர்களாகவும், (மறைவகாக்)
கடைக்ககண்ணால்
பார்த்த வண்ணமாகவும்
அவர்கள் (நரகத்தின்
முன்) கொண்டவரப்
படுவதை நீர் காண்பீர்; (அவ்வேளை)
ஈமான் கொண்டவர்கள் கூறுவார்கள்; "எவர்
தங்களுக்கும், தம் குடும்பத்தாருக்கும்
நஷ்டத்தை தேடிக் கொண்டார்களோ, கியாம
நாளில் நிச்சயமாக
அவர்கள் முற்றிலும்
நஷ்டவாளர்தாம்." அறிந்து
கொள்க! நிச்சயமாக
அநியாயக்காரர்கள்
நிலையான வேதனையில்
இருப்பார்கள்.
[42:46]
(அந்நாளில்)
அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு
உதவிபுரியும்
உபகாரிகளில் எவரும்
இருக்கமாட்டார்கள்; அன்றியும், அல்லாஹ்
எவரை வழிகேட்டில்
விட்டுவிடுகிறானோ
அவருக்கு வேறுவழியொன்றுமில்லை.
[42:47]
அல்லாஹ்வை
விட்டும் தப்பித்துச்
செல்ல போக்கில்லாத
(கியாம) நாள் வருவதற்கு
முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு)
பதிலளியுங்கள்
- அந்நாளில் உங்களுக்கு
ஒதுங்குமிடம்
எதுவும் இராது (உங்கள்
பாவங்களை) நீங்கள்
மறுக்கவும் முடியாது.
[42:48]
எனினும்
(நபியே!) அவர்கள் புறக்கணித்து
விட்டால் (நீர்
கவலையுறாதீர்); நாம்
உம்மை அவர்கள்
மீது பாதுகாவலராக
அனுப்பவில்லை
(தூதுச் செய்தியை
எடுத்துக் கூறி)
எத்திவைப்பது
தான் உம்மீது
கடமையாகும்; இன்னும், நிச்சயமாக
நம்முடைய ரஹ்மத்தை
- நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச்
செய்தால், அது கண்டு
அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால்
அவர்களுடைய கைகள்
முற்படுத்தியுள்ள
(பாவத்தின காரணத்)தால்
அவர்களுக்குத்
தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக
மனிதன் நன்றி கெட்டு
மாறு செய்பவனாக
இருக்கின்றான்.
[42:49]
அல்லாஹ்வுக்கே
வானங்களுடையவும் பூமியுடையவும்
ஆட்சி சொந்தமாகும்; ஆகவே
தான் விரும்பியவற்றை
அவன் படைக்கின்றான்; தான்
விரும்புவோருக்குப்
பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும்
தான் விரும்புவோருக்கு
ஆண் மக்களை அளிக்கின்றான்.
[42:50]
அல்லது
அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண்
மக்களையும் சேர்த்துக்
கொடுக்கின்றான்; அன்றியும்
தான் விரும்பியோரை
மலடாகவும் செய்கிறான்
- நிச்சயமாக, அவன்
மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.
[42:51]
அல்லாஹ்
எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ
அல்லது திரைக்கப்பால்
இருந்தோ அல்லது
தான் விரும்பியதைத்
தன் அனுமதியின்
மீது வஹீயை அறிவிக்கக்
கூடிய ஒரு தூதரை
அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்)
பேசவதில்லை நிச்சயமாக
அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.