[42:52]
(நபியே!) இவ்வாறே
நாம் நம்முடைய
கட்டளையில் ஆன்மாவானதை
(குர்ஆனை)
வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு
முன்னர்) வேதம்
என்பதோ ஈமான் என்பதோ
என்னவென்று நீர் அறிபவராக
இருக்கவில்லை
- எனினும் நாம்
அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு
இதைக் கொண்டு நேர்வழி
காட்டுகிறோம்
- நிச்சயமாக நீர் (மக்களை)
நேரான பதையில்
வழி காண்பிக்கின்றீர்.
[42:53]
(அதுவே)
அல்லாஹ்வின் வழியாகும்; வானங்களில்
இருப்பவையும், பூமியில்
இருப்பவையும்
(யாவும்) அவனுக்கே சொந்தம்
- அறிந்து கொள்க!
அல்லாஹ்விடமே
எல்லாக் காரியங்களும்
மீண்டு வருகின்றன.
Az-Zukhruf
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[43:1]
ஹா, மீம்.
[43:2]
விளக்கமான
இவ்வேதத்தின்
மீது சத்தியமாக.
[43:3]
நீங்கள்
அறிந்து கொள்வதற்காக இதனை
நாம் அரபி மொழி
குர்ஆனாக நிச்சயமாக
ஆக்கியிருக்கிறோம்;.
[43:4]
இன்னும்
நிச்சயமாக, இது நம்மிடத்திலுள்ள
உம்முல் கிதாபில்
(தாய் நூலில்) இருக்கிறது.
(இதுவே வேதங்களில்) மிக்க
மேலானதும், ஞானம்
மிக்கதுமாகும்.
[43:5]
நீங்கள்
வரம்பு மீறிய சமூகத்தாராகி
விட்டீர்கள் என்பதற்காக, இந்த
உபதேசத்தை உங்களைவிட்டு
நாம் அகற்றி விடுவோமா?
[43:6]
அன்றியும், முன்னிருந்தார்களிடமும்
நாம் எத்தனையோ
தூதர்களை அனுப்பியிருக்கிறோம்.
[43:7]
ஆனால்
அவர்களிடம் வந்த
நபி ஒவ்வொருவரையும்
அவர்கள் பரிகாசம்
செய்யாது இருக்கவில்லை.
[43:8]
எனினும்
இவர்களை விட மிக்க பலசாலிகளான
அவர்களைப் பிடியாகப்
பிடித்து நாம்
அழித்து இருக்கிறோம்; (இவ்வாறாக உங்களுக்கு)
முன்னருந்தோரின்
உதாரணம் நடந்தேறியிருக்கிறது.
[43:9]
(நபியே!) நீர்
அவர்களிடம்; "வானங்களையும், பூமியையும்
படைத்தவன் யார்?" என்று
கேட்டால், "யாவரையும்
மிகைத்தவனும், எல்லாவற்றையும்
அறிந்தோனுமாகிய
அவனே அவற்றை படைத்தான்" என்று
நிச்சயமாக அவர்கள்
கூறுவார்கள்.
[43:10]
அவனே
பூமியை உங்களுக்கு விரிப்பாக
ஆக்கி, அதில் நீங்கள்
(விரும்பி இடத்திற்குச்)
செல்லும் பொருட்டு வழிகளையும்
ஆக்கினான்.