[43:61]
நிச்சயமாக
அவர் (ஈஸா) இறுதிக் காலத்திற்குரிய
அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக
நீங்கள் இதில்
சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே
பின்பற்றுங்கள்; இதுவே
ஸிராத்துல் முஸ்தகீம்
(நேரான வழி).
[43:62]
அன்றியும்
ஷைத்தான் உங்களை (நேர்வழியை
விடடும்) தடுத்து
விடாதிருக்கட்டும்
- நிச்சயமாக அவன்
உங்களுக்குப் பகிரங்கமான
விரோதியாகவே இருக்கிறான்.
[43:63]
இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன்
வந்தபோது "மெய்யாகவே
நான் உங்களுக்கு
ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள்
கருத்து வேற்றுமையுடன்
இருக்கும் சிலவற்றை
உங்களுக்கு விளக்கிக்
கூறுவேன் - ஆகவே
நீங்கள் அல்லாஹ்விடம்
பயபக்தியுடன்
இருங்கள்; எனக்கும்
கீழ்படியுங்கள்" என்று
கூறினார்.
[43:64]
நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும்
இறைவன், உங்களுக்கும்
இறைவன். ஆகவே அவனையே
வணங்குங்கள், இதுவே ஸிராத்துல்
முஸ்தகீம் (நேரான
வழி).
[43:65]
ஆனால், அவர்களிடையே
(ஏற்பட்ட பல) பிரிவினர்
தமக்குள் மாறுபட்டனர்; ஆதலின், அநியாயம்
செயதார்களே அவர்களுக்கு நோவினை
தரும் நாளுடைய
வேதனையின் கேடுதான்
உண்டாகும்.
[43:66]
தங்களுக்கே
தெரியாத விதத்தில் திடுகூறாக
இவர்களுக்கு (இறுதி
நாளின்) வேளை வருவதைத்
தவிர, (வேறெதையும்)
இவர்கள் எதிர்ப்பார்க்கிறார்களா?
[43:67]
பயபக்தியுடையவர்களைத்
தவிர, நண்பர்கள்
அந்நாளில் சிலருக்குச்
சிலர் பகைவர்கள்
ஆகிவிடுவார்கள்.
[43:68]
என்னுடைய
அடியார்களே! இந்நாளில்
உங்களுக்கு எவ்வித
பயமுமில்லை நீங்கள்
துக்கப்படவும்
மாட்டீர்கள் (என்று
முஃமின்களுக்கு
அல்லாஹ்வின் அறிவிப்பு
வரும்).
[43:69]
இவர்கள்
தாம் நம் வசனங்கள் மீது
ஈமான் கொண்டு, (முற்றிலும்
வழிப்பட்டு நடந்த)
முஸ்லிம்களாக
இருந்தனர்.
[43:70]
நீங்களும், உங்கள்
மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக
சுவர்க்கத்தில்
நுழையுங்கள் (என்று
மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).
[43:71]
பொன்
தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச்
சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும்
அங்கு அவர்கள்
மனம் விரும்பியதும், கண்களுக்கு
இன்பம் தருவதும்
அதிலுள்ளன் இன்னும், "நீங்கள் இங்கு
என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!" (என அவர்களிடம்
சொல்லப்படும்.)
[43:72]
நீங்கள்
செய்து கொண்டிருந்த
(நன்மையான) தன்
காரணமாக இந்த சுவர்க்கத்தை
நீங்கள் அனந்தரங்
கொண்டீர்கள்.
[43:73]
உங்களுக்கு
அதில் ஏராளமான
கனிவகைகள் இருக்கின்றன
அவற்றிலிருந்து
நீங்கள் உண்பீர்கள்" (எனக்
கூறப்படும்).