[43:74]
நிச்சயமாக, குற்றவாளிகள்
நரக வேதனையில்
என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
[43:75]
அவர்களுக்கு
அ(வ்வேதனையான)து குறைக்கப்பட
மாட்டாது அதில்
அவர்கள் நம்பிக்கையையும்
இழந்து விடுவார்கள்.
[43:76]
எனினும், நாம்
அவர்களுக்கு யாதோர்
அநியாயமும் செய்யவில்லை
ஆனால் அவர்கள்
தமக்குத் தாமே
அநியாயம் செய்து கொண்டவர்களே.
[43:77]
மேலும், அவர்கள்
(நரகத்தில்) "யா மாலிக்" உமது
இறைவன் எங்களை
முடித்து விடட்டுமே!" என்று சப்பதமிடுவார்கள்; அதற்கு
அவர் "நிச்சயமாக
நீங்கள் (இங்கு)
நிலைத்து இருக்க வேண்டியவர்களே" என்று
கூறுவார்.
[43:78]
நிச்சயமாக, நாம்
உங்களிடம் சத்தியத்தைக்
கொண்டு வந்தோம்; ஆனால்
உங்களில் பெரும்பாலோர்
சத்தியத்தை வெறுக்கிறவர்களாக
இருந்தார்கள்
(என்றும் கூறப்படும்).
[43:79]
அல்லது
அவர்கள் (மக்கத்து காஃபிர்கள்)
ஏதாவது முடிவு
கட்டியிருக்கிறார்களா? ஆனால்
(அனைத்துக் காரியங்களுக்கும்)
முடிவு கட்டுகிறது
நாம் தான்.
[43:80]
அல்லது, அவர்களுடைய இரகசியத்தையும், அவர்கள்
தனித்திருந்த
கூடிப் பேசவதையும்
நாம் கேட்கவில்லையென்று எண்ணிக்
கொண்டார்களா? அல்ல
மேலும் அவர்களிடமுள்ள
நம் தூதர்களை
(எல்லாவற்றையும்) எழுதிக்
கொள்கிறார்கள்.
[43:81]
(நபியே!) நீர்
கூறும்; "அர் ரஹ்மானுக்கு
ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில்
நானே முதன்மையானவனாக
இருந்திருப்பேன்!"
[43:82]
வானங்களுக்கும்
பூமிக்கும் இறைவன்; அர்ஷுக்கும்
இறைவன். (அத்தகைய
இறைவன் அவனுக்கு
சந்ததி உண்டென்று) அவர்கள்
வர்ணிப்பதை விட்டும்
மகா பரிசத்தமானவன்.
[43:83]
ஆகையால், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட
அவர்களுடைய (வேதனையின்)
நாளை அவர்கள் சந்திக்கும்
வரை, அவர்களை (வீண்
விவாதத்தில்) மூழ்கியிருக்கவும், விளையாட்டில்
கழிக்கவும் (நபியே!)
நீர் விட்டு
விடும்.
[43:84]
அன்றியும், அவனே
வானத்தின் நாயனும்
பூமியின் நாயனும்
ஆவான்; மேலும், அவனே
ஞானம் மிக்கோன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
[43:85]
அவன்
பெரும் பாக்கியம் உடையவன்; வானங்கள், பூமி, இவை இரண்டிற்குமிடையே
உள்ளவை ஆகியவற்றின்
ஆடசி அவனுக்குடையதே, அவனிடம்
தான் (இறுதி) வேளைக்குரிய
ஞானமும் இருக்கிறது
மேலும், அவனிடமே நீங்கள்
மீட்கப்படுவீர்கள்.
[43:86]
அன்றியும், அல்லாஹ்வையன்றி அவர்கள்
எவர்களை (தெய்வங்களாக)
அழைக்கிறார்களோ, அவர்கள்
(அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து
பேச அதிகாரமுள்ளவர்கள்
அல்லர். ஆனால்
எவர்கள் சத்தியத்தை
அறிந்து (ஏற்றவர்காளாக
அதற்குச்) சாட்சியம்
கூறுகிறார்களோ
அவர்கள் (இறை அனுமதி
கொண்டு பரிந்து
பேசவர்).
[43:87]
மேலும், அவர்களிடம்
யார் அவர்களைப்
படைத்தது என்று
நீர் கேட்டால் "அல்லாஹ்" என்றே
அவர்கள் நிச்சயமாக
கூறுவார்கள்; அவ்வாறிக்கும்
போது (அவனைவிட்டு)
அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?
[43:88]
என்
இறைவா! நிச்சயமாக
இவர்கள் நம்பிக்கை
கொள்ளா சமூகத்தாராக
இருக்கிறார்கள்
என்று (நபி) கூறுவதையும்
(இறைவன் அறிகிறான்).
[43:89]
ஆகவே, நீர்
அவர்களைப் புறக்கணித்து "ஸலாமுன்" என்று
கூறிவிடும்; (உண்மைமை
பின்னர்) அவர்கள் அறிந்து
கொள்வார்கள்.