[44:19]
அன்றியும், "நீங்கள் அல்லாஹ்வுக்கு
எதிராக உங்களை
உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக
நான் உங்களிடம்
தெளிவான சான்றுகளுடன்
வந்திருக்கின்றேன்.
[44:20]
அன்றியும், "என்னை நீங்கள்
கல்லெறிந்து கொல்லாதிருக்கும்
பொருட்டு நான், என்னுடைய
இறைவனும் உங்களுடைய
இறைவனுமாகிய அவனிடமே
நிச்சயமாகப் பாதுகாவல்
தேடுகிறேன்.
[44:21]
மேலும், நீங்கள்
என் மீது நம்பிக்கை
கொள்ளவில்லையாயின்
என்னை விட்டு விலகிக்
கொள்ளங்கள் (என்று
மூஸா கூறினார்).
[44:22]
(அவர்கள்
வரம்பு மீறியவர்களாகவே
இருந்தார்கள்). "நிச்சயமாக
இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே
இருக்கிறார்கள்"
என்று
தம் இறைவனிடம்
பிரார்த்தித்துக் கூறினார்.
[44:23]
என்
அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில்
நீர் (வேறிடம்)
செல்க நிச்சயமாக
நீங்கள பின் தொடரப்படுவீர்கள் (என்று
இறைவன் கூறினான்.)
[44:24]
அன்றியும்.
அக்கடலைப் பிளவுள்ளதாகவே
விட்டுச் செல்லும், நிச்சயமாக
அவர்கள் (அதில்)
மூழ்கடிக்கப்பட வேண்டிய
படையினராகவே இருக்கின்றார்கள்
(எனக் கூறி" இறைவன்
ஃபிர்அவ்னையும் அவன்
படையினரையும்
மூழ்கடித்தான்).
[44:25]
எத்தனை
தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும்
அவர்கள் விட்டுச்
சென்றார்கள்?
[44:26]
இன்னும்
(எத்தனையோ) விளைநிலங்களையும்
நேர்த்தியான மாளிகைகளையும்
(விட்டுச் சென்றார்கள்).
[44:27]
இன்னும்
அவர்கள் இன்பமாக அனுபவித்துக்
கொண்டிருந்த சுகானுபவங்களையும்
(விட்டுச் சென்றார்கள்).
[44:28]
அவ்வாறே
(முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு
வேறு சமூகத்தாரை
வாரிசாக நாம் ஆக்கினோம்.
[44:29]
ஆகவே, அவர்களுக்காக
வானமும் பூமியும்
அழவுமில்லை (தப்பித்துக்
கொள்ள) அவகாசமும்
கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை.