[45:23]
(நபியே!) எவன்
தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத்
தன்னுடைய தெய்வமாக
ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர்
பார்த்தீரா? மேலும், அறிந்தே
அல்லாஹ் அவனை வழிகேட்டில்
விட்டு அவனுடைய
காதுகள் மீதும் இருதயத்தின்
மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய
பார்வை மீதும்
திரையை அமைத்துவிட்டான்.
எனவே, அல்லாஹ்வுக்குப்
பிறகு அவனுக்கு
நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள்
சிந்தித்து உணர
வேண்டாமா?
[45:24]
மேலும்
(மறுமையை நம்பாத) அவர்கள்; "நமது
இந்த உலக வாழ்க்கையைத்
தவிர வேறு (வாழ்க்கை)
கிடையாது நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; "காலம்" தவிர
வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை" என்று
கூறுகிறார்கள்; அவர்களுக்கு
அது பற்றிய அறிவு
கிடையாது - அவர்கள்
(இது பற்றிக் கற்பனையாக)
எண்ணுவதைத் தவிர
வேறில்லை.
[45:25]
அவர்களிடம்
தெளிவான நம் வசனங்கள்
ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய
வாதமெல்லாம், "நீங்கள் உண்மையாளர்களாக
இருந்தால் எங்களுடைய
மூதாதையரை (எழுப்பிக்)
கொண்டு வாருங்கள்" என்பது
தவிர வேறில்லை.
[45:26]
அல்லாஹ்
உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர்
அவனே உங்களை மரணம்
அடையச் செய்கிறான்; பின்னர்
கியாம நாளன்று
அவன் உங்களை ஒன்று
சேர்ப்பான் - இதில்
சந்தேகமேயில்லை
எனினும் மனிதரில் பெரும்பாலோர்
(இதை) அறியமாட்டார்கள்
என்று (நபியே!) நீர்
கூறும்.
[45:27]
அன்றியும், வானங்களுடையவும், பூமியுடையவும்
ஆட்சி அல்லாஹ்வுக்கே
உரியது மேலும், இறுதித்
தீர்ப்புக்கான வேளைவந்து
வாய்க்கும் நாளில், பொய்யர்கள்
நஷ்டமடைவார்கள்.
[45:28]
(அன்று)
ஒவ்வொரு சமுதாயத்தையும்
முழந்தாளிட்டிருக்க
(நபியே!)
நீர் காண்பீர்; ஒவ்வொரு
சமுதாயமும் அதனதன்
(பதிவு)
புத்தகத்தின்
பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள்
(உலகில்) செய்திருந்ததற்குரிய
கூலி கொடுக்கப்படுவீர்கள்.
[45:29]
இது
உங்களைப்பற்றிய
உண்மையைக் கூறும்
நம்முடைய புத்தகம்; நிச்சயமாக
நாம் நீங்கள் செய்து
வந்ததைப் பதிவு
செய்து கொண்டிருந்தோம்
(என்று கூறப்படும்).
[45:30]
ஆகவே, எவர்கள்
ஈமான் கொண்டு நல்லமல்கள்
செய்து வந்தார்களோ, அவர்களை
அவர்களுடைய இறைவன்
தன் ரஹமத்தில் பிரவேசிக்கச்
செய்வான்; அதுவே
தெளிவான வெற்றியாகும்.
[45:31]
ஆனால், நிராகரித்தவர்களிடம்; "உங்களுக்கு
என் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டுக்
கொண்டு இருக்கவில்லையா? அப்பொழுது
நீங்கள் பெருமையடித்துக்
கொண்டு குற்றவாளிகளாக
இருந்தீர்கள்" (என்று
சொல்லப்படும்).
[45:32]
மேலும் "நிச்சயமாக அல்லாஹ்வின்
வாக்குறுதி உண்மையானது
மறுமை நாள் அது
பற்றியும் சந்தேகமில்லை" என்று
கூறப்பட்ட போது; "(மறுமை)
நாள் என்ன என்று
நாங்கள் அறியோம்; அது ஒரு வெறும்
கற்பனை என்றே நாங்கள்
கருதுகிறோம். எனவே
(அதை) நாங்கள் உறுதியென
நம்புபவர்களல்லர்" என்று
நீங்கள் கூறினீர்கள்.