[45:33]
அவர்கள்
செய்த தீமையெல்லாம் (அந்நாளில்)
அவர்களுக்கு வெளியாகும்; எதை அவர்கள்
பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே
அவர்களைச் சூழ்ந்து
கொள்ளும்.
[45:34]
இன்னும், "நீங்கள் உங்களுடைய
இந்நாளின் சந்திப்பை
மறந்து விட்டது
போன்றே, இன்றை தினம்
நாம் உங்களை மறக்கிறோம்; அன்றியும்
நீங்கள் தங்குமிடம்
நரகம் தான்; மேலும், உங்களுக்கு
உதவி செய்பவர்
எவருமில்லை" என்று
(அவர்களுக்குக்)
கூறப்படும்.
[45:35]
நீங்கள்
அல்லஹ்வின் வசனங்களை ஏளனமாக
எடுத்துக் கொண்டதனாலும்
இவ்வுலக வாழ்க்கை
உங்களை மயக்கி
ஏமாற்றி விட்டதினாலுமே
இந்த நிலை. இன்றைய
தினத்தில் அதிலிருந்து
அவர்கள் வெளியேற்றப்படவும்
மாட்டார்கள்; மன்னிப்பளிக்கப்படவும்
மாட்டார்கள்.
[45:36]
ஆகவே
வானங்களுக்கும்
இறைவனான - பூமிக்கும்
இறைவனான - அகிலத்தாருக்கெல்லாம்
இறைவனான அல்லாஹ்வுக்கே
எல்லாப் புகழும்.
[45:37]
இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள
பெருமை அவனுக்கே
உரியது மேலும், அவன்
தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம்
மிக்கோன்.
Al-Ahqâf
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[46:1]
ஹா, மீம்.
[46:2]
இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும்
ஞானம் மிக்கோனுமாகிய
அல்லாஹ்விடமிருந்தே
இறக்கியருளப்பட்டது.
[46:3]
வானங்களையும், பூமியையும் இவையிரண்டிற்கும்
இடையே உள்ளவற்றையும்
உண்மையையும், ஒரு குறிப்பிட்ட
தவணையையும் கொண்டல்லாமல்
நாம் படைக்கவில்லை
ஆனால் நிராகரிப்பவர்களோ, தங்களுக்கு
அச்சமூட்டி எச்சரிக்கை
செய்யப்பட்டதைப்
புறக்கணிப்பவர்களாக
இருக்கிறார்கள்.
[46:4]
நீங்கள்
அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை
கவனித்தீர்களா? பூமியிலுள்ள
எதை அவை படைத்துள்ளன
அல்லது அவற்றுக்கு வானங்களில்
ஏதாவது பங்கு உண்டா? என்பதை
எனக்குக் காண்பியுங்கள்!
நீங்கள் உண்மையாளர்களாக
இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள
ஒரு வேதத்தையோ
அல்லது (முன்னோர்களின்)
அறிவு ஞானங்களில்
மிஞ்சிய ஏதேனும்
பகுதியையோ (உங்கள்
கூற்றுக்கு ஆதாரமாக)
என்னிடம் கொண்டு
வாருங்கள்! என்று
(நபியே!) நீர் கூறுவீராக.
[46:5]
கியாம
நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு
பதில் கொடுக்க
மாட்டாத - அல்லாஹ்
அல்லாதவர்களை
அழைப்பவர்களைவிட
வழி கெட்டவர்கள்
யார்? தங்களை அழைப்பதையே
அவர்கள் அறியமுடியாது.