[48:10]
நிச்சயமாக
எவர்கள் உம்மிடம் பைஅத்து(வாக்குறுதி)
செய்கிறார்களோ, அவர்கள்
அல்லாஹ்விடமே
வைஅத்(வாக்குறுதி) செய்கின்றனர்
- அல்லாஹ்வின்
கை அவர்களுடைய
கைகளின் மேல் இருக்கிறது
ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை)
முறித்து விடுகிறானோ, நிச்சயமாக
அவன் தனக்குக்
கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர்
அல்லாஹ்விடம்
செய்த அவ்வாக்குறுதியை
நிறைவேற்றுகிறாரோ
அவருக்கு அல்லாஹ் மகத்தான
நற்கூலியை விரைவில்
வழங்குவான்.
[48:11]
(நபியே!
போருக்கு உம்முடன் சேர்ந்து
வராமல்) பின்தங்கி
விட்ட நாட்டுப்
புறத்து அரபிகள்; "எங்களுடைய சொத்துகளும், எங்கள்
குடும்பங்களும்
(உங்களுடன் வராது)
எங்களை அலுவல்கள் உள்ளவர்களாக்கி
விட்டன எனவே, நீங்கள்
எங்களுக்காக மன்னிப்புக் கோருவீர்களாக!" எனக் கூறுவர்.
அவர்கள் தங்கள்
இதயங்களில் இல்லாததைத்
தம் நாவுகளினால்
கூறுகிறார்கள்; "அல்லாஹ்
உங்களுக்கு ஒரு
கெடுதியை நாடினாலும் அல்லது
அவன் உங்களுக்கு
ஒரு நன்மையை நாடினாலும், அதில்
எதையும் அவனுக்கெதிராக உங்களுக்கு(த்
தடுக்கக் கூடிய)
அதிகாரம் பெற்றவர்
யார்! அப்படியல்ல!
அல்லாஹ் நீங்கள்
செய்வதை நன்குணர்ந்தவனாக
இருக்கிறான்" எனக் கூறும்.
[48:12]
(நீங்கள்
கூறுவது போல்)
அல்ல (அல்லாஹ்வின்)
தூதரும், முஃமின்களும், தங்கள்
குடம்பத்தாரிடம்
ஒரு போதும் திரும்ப
மாட்டார்கள் என்று
நீங்கள் நிச்சயமாக
எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; இதுவே உங்கள்
இதயங்களில் அழகாக்கப்பட்டது; ஆதலால்
நீங்கள் ஒரு கெட்ட
எண்ணத்தை எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; அதனால்
நீங்கள் நாசமடையும்
சமூகத்தினர்களாகி
விட்டீர்கள்.
[48:13]
அன்றியும்
எவர் அல்லாஹ்வின் மீதும்
அவன் தூதர் மீதும்
ஈமான் கொள்ளவில்லையோ
- நிச்சயமாக அக்காஃபிர்களுக்கு நாம்
கொழுந்து விட்டெரியும்
(நரக) நெருப்பைச்
சித்தம் செய்திருக்கிறோம்.
[48:14]
மேலும்
வானங்களிடையவும், பூமியினுடையவும்
ஆட்சி அல்லாஹ்வுக்கே!
தான் விரும்பியவர்களை
அவன் மன்னிக்கிறான்; தான்
விரும்பியவர்களை
அவன் வேதனை செய்கிறான்
- அல்லாஹ் மிக்க
மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
[48:15]
போர்க்களப்
பொருட்களை எடுத்துக்
கொள்வதற்காக நீங்கள்
சென்றீர்களாயின், (போருக்கு
உம்முடன் சேர்ந்து வராமல்)
பின் தங்கி விட்டவர்கள், "நாங்களும்
உங்களைப் பின்பற்றிவர
அனுமதி கொடுங்கள்" என்று
கூறுவார்கள்; அவர்கள்
அல்லாஹ்வின் கட்டளையை
மாற்றிவிட நாடுகிறார்கள்; "நீங்கள்
எங்களைப் பின்பற்றி
வரவே வேண்டாம்; இவ்வாறே அல்லாஹ்
முன்னர் கூறியிருக்கின்றான்" என்று
(நபியே! அவர்களிடம்)
நீர் சொல்லி
விடுவீராக ஆனால், அவர்கள்; "அல்ல!
நீங்கள் எங்கள்
மீது பொறாமை கொண்டுள்ளீர்கள்" எனக்
கூறுவார்கள்; அப்படியல்ல!
அவர்கள் மிக சொற்பமாகவே அன்றி
(பெரும்பாலானதை)
அறிந்துணராமலே
இருக்கிறார்கள்.