[48:29]
முஹம்மது(ஸல்)
அல்லாஹ்வின் தூதராகவே
இருக்கின்றார்; அவருடன்
இருப்பவர்கள், காஃபிர்களிடம்
கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே
இரக்கமிக்கவர்கள்.
ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது
செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து
(அவன்) அருளையும்
(அவனுடைய) திருப்பொருத்தத்தையும்
விரும்பி வேண்டுபவர்களாகவும்
அவர்களை நீர்
காண்பீர்; அவர்களுடைய
அடையாளமாவது அவர்களுடைய
முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய
அடையாளமிருக்கும்; இதுவெ
தவ்றாத்திலுள்ள
அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள
அவர்கள் உதாரணமாவது
ஒரு பயிரைப் போன்றது
அது தன் முளையைக்
கிளப்பி(ய பின்)
அதை பலப்படுத்துகிறது
பின்னர் அது பருத்துக்
கனமாகி, பிறகு விவாசியிகளை மகிழ்வடையச்
செய்யும் விதத்தில், அது தன்
அடித்தண்டின்
மீது நிமிர்ந்து செவ்வையாக
நிற்கிறது இவற்றைக்
கொண்டு நிராகரிப்பவர்களை
அவன் கோப மூட்டுகிறான்
- ஆனால் அவர்களில்
எவர்கள் ஈமான்
கொண்டு ஸாலிஹான
(நல்ல) அமல்கள்
செய்கிறார்களோ அவர்களுக்கு
அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான
கூலியையும் வாக்களிக்கின்றான்.
Al-Hujurât
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[49:1]
முஃமின்களே!
அல்லாஹ்வுக்கும், அவனுடைய
தூதருக்கும் முன்னர்
(பேசவதற்கு) நீங்கள்
முந்தாதீர்கள்; அல்லாஹ்விடம்
பயபக்தியுடன்
இருங்கள்; நிச்சயமாக
அல்லாஹ் (யாவற்றையும்)
செவியுறுபவன்; நன்கறிபவன்.
[49:2]
முஃமினகளே!
நீங்கள் நபியின்
சப்தத்திற்கு
மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள்
ஒருவர் மற்றொருவருடன்
இரைந்து பேசவதைப் போல், அவரிடம்
நீங்கள் இரைந்து
போசாதீர்கள், (இவற்றால்)
நீங்கள் அறிந்து
கொள்ள முடியாத
நிலையில் உங்கள்
அமல்கள் அழிந்து
போகும்.
[49:3]
நிச்சயமாக, எவர்கள்
அல்லாஹ்வுடைய
தூதரின் முன்பு, தங்களுடைய
சப்தங்களைத் தாழ்த்திக்
கொள்கிறார்களோ
அ(த்தகைய)வர்களின்
இதயங்களை அல்லாஹ்
பயபக்திக்காகச் சோதனை
செய்கிறான் - அவர்களுக்கு
மன்னிப்பும், மகத்தான்
கூலியும் உண்டு.
[49:4]
(நபியே!) நிச்சயமாக, எவர்கள்
(உம்) அறைகளுக்கு
வெளியே இருந்து
உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில்
பெரும்பாலோர்
விளங்கிக் கொள்ளாதவர்களே!