[49:5]
நீர்
அவர்களிடம் வெளிப்பட்டு
வரும் வரையில், அவர்கள்
பொறுத்திருந்தார்களானால், அது அவர்களுக்கு
நலமாக இருக்கும்; (எனினும்)
அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
[49:6]
முஃமின்களே!
ஃபாஸிக் (தீயவன்)
எவனும் உங்களிடம்
ஒரு செய்தியைக்
கொண்டு வந்தால், அதைத்
தீர்க்க விசாரித்துக்
கொள்ளுங்கள்; (இல்லையேல்)
அறியாமையினால் (குற்ற
மற்ற) ஒரு சமூகத்தாருக்கு
நீங்கள் தீங்கு
செய்து விடலாம்; பின்னர் நீங்கள்
செய்தவை பற்றி
நீங்களே கைசேதப்
படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
[49:7]
அறிந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக
உங்களிடையே அல்லாஹ்வின்
தூதர் இருக்கிறார்; அநேக
காரியங்களில்
அவர் உங்களுக்கு
வழிப்பட்டால், திடமாக
நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும்
அல்லாஹ் ஈமானை
(நம்பிக்கையை)
உங்களுக்குப் பிரியமுடையதாக்கி
உங்கள் இதயங்களிலும்
அதனை அழகாக்கியும்
வைத்தான் - அன்றியும் குஃப்ரையும்
(நிராகரிப்பையும்)
பாவத்தையும், மாறுபாடு
செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும்
ஆக்கினான்; இத்தகையவர்கள்
தாம் நேர்வழியில்
நடப்பவர்கள்.
[49:8]
(இது) அல்லாஹ்விடமிருந்துள்ள
அனுக்கிரமும், அருள்கொடையினாலுமேயாகும், மேலும் அல்லாஹ்
நன்கறிந்தவன்; ஞானம்
மிக்கோன்.
[49:9]
முஃமின்களில்
இருசாரார் தங்களுக்குள்
சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம்
உண்டாக்குங்கள்.
பின்னர் அவர்களில்
ஒரு சாரார் மற்றவர்
மீது அக்கிரமம்
செய்தால், அக்கிரமம்
செய்வோர் அல்லாஹ்வுடைய
கட்டளையின் பால்
திரும்பும் வரையில், (அவர்களுடன்)
போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின்
பால்) திரும்பி
விட்டால் நியாயமாக
அவ்விரு சாராரிடையே
சமாதானம் உண்டாக்குங்கள்.
(இதில்) நீங்கள்
நீதியுடன் நடந்து
கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்
நீதியாளர்களை
நேசிக்கிறான்.
[49:10]
நிச்சயமாக
முஃமின்கள் (யாவரும்)
சகோரர்களே ஆகவே, உங்கள்
இரு சகோதரர்களுக்கிடையில்
நீங்கள் சமாதானம்
உண்டாக்குங்கள்; இன்னும்
உங்கள் மீது கிருபை
செய்யப்படும்
பொருட்டு, நீங்கள்
அல்லாஹ்வை அஞ்சங்கள்.
[49:11]
முஃமின்களே!
ஒரு சமூகத்தார்
பிறியதொரு சமூகத்தாரைப்
பரிகாசம் செய்ய
வேண்டாம். ஏனெனில்
(பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட
மேலானவர்களாக
இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப்
பெண்களும், மற்றெந்தப்
பெண்களையும் (பரிகாசம்
செய்ய வேண்டாம்)
- ஏனெனில் இவர்கள்
அவர்களை விட மேலானவர்களாக
இருக்கலாம்; இன்னும், உங்களில்
ஒருவருக்கொருவர் பழித்துக்
கொள்ளாதீர்கள், இன்னும்
(உங்களில்) ஒருவரையொருவர்
(தீய) பட்டப்பெயர்களால்
அழைக்காதீர்கள்; ஈமான்
கொண்டபின் (அவ்வாறு
தீய) பட்டப் பெயர் சூட்டுவது
மிகக் கெட்டதாகும்; எவர்கள்
(இவற்றிலிருந்து)
மீளவில்லையோ, அத்தகையவர்கள்
அநியாயக்காரர்கள்
ஆவார்கள்.