[50:36]
அன்றியும், (நிராகரிப்போரான) அவர்களைவிட
பலசாளிகளாக இருந்த
எத்தனையோ தலைமுறையினரை
அவர்களுக்கு முன்னர்
நாம் அழித்திருக்கின்றோம்; அவர்கள்
(அழிவிலிருந்து
தப்பித்துக் கொள்ள)
பல ஊர்களிலிரும்
(துளைத்துச்) சென்றனர்; ஆனால்
அவர்கள் தப்பித்துக்
கொள்ள புகலிடம் இருந்ததா?
[50:37]
எவருக்கு
(நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது
எவர் ஓர்மையுடன்
செவிதாழ்த்திக்
கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக
இதில் நினைவுறுத்தலும்
(படிப்பினையும்)
இருக்கிறது.
[50:38]
நிச்சயமாக
நாம் தாம் வானங்களையும், பூமியையும்
அவ்விரண்டிற்குமிடையே
உள்ளவற்றையும்
ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்)
எத்தகைய களைப்பும்
நம்மைத் தீண்டவில்லை.
[50:39]
எனவே
(நபியே!) அவர்கள் கூறுவதைப்
பற்றிப் பொறுமையோடிருப்பீராக
இன்னும், சூரிய
உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு
முன்னரும் உம்முடைய
இறைவனின் புகழைக்
கொண்டு நீர் தஸ்பீஹு செய்வீராக.
[50:40]
இன்னும்
இரவிலிருந்தும், ஸுஜூதுக்குப்
பின்னரும் அவனைத்
தஸ்பீஹு செய்வீராக.
[50:41]
மேலும், சமீபமான இடத்திலிருந்து
கூவி அழைப்பவர்
அழைக்கும் நாளை(ப்
பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.
[50:42]
அந்நாளில், உண்மையைக்
கொண்டு ஒலிக்கும்
பெரும் சப்தத்தை
அவர்கள் கேட்பார்கள்.
அதுதான் (மரித்தோர்)
வெளியேறும் நாளாகும்.
[50:43]
நிச்சயமாக
நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே
மரிக்கும்படிச்
செய்கிறோம் - அன்றியும்
நம்மிடமே (எல்லோரும்) மீண்டு
வர வேண்டியிருக்கிறது.
[50:44]
பூமி
பிளந்து, அவர்கள்
வேகமாக (வெளியே) வரும்
நாள்; இவ்வாறு (அவர்களை)
ஒன்று சேர்ப்பது
நமக்கு எளிதானதாகும்.
[50:45]
அவர்கள்
கூறுவதை நாம் நன்கறிவோம்
- நீர் அவர்கள்
மீது நிர்ப்பந்தம்
செய்பவரல்லர், ஆகவே
(நம்) அச்சுறுத்தலை
பயப்படுவோருக்கு, இந்த
குர்ஆனை கொண்டு
நல்லபதேசம் செய்வீராக.
Adh-Dhâriyât
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[51:1]
(புழுதிகளை
எழுப்பி) நன்கு பரத்தும்
(காற்றுகள்) மீது
சத்தியமாக!
[51:2]
(மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின்
மீதும்,
[51:3]
பின்னர்
(கடலில்) இலேசாகச் செல்பவற்றின்
மீதும்,
[51:4]
(பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை
அல்லாஹ்வின்) கட்டளைப்படி
பங்கிடுவோர் மீதும்
சத்தியமாக
[51:5]
நிச்சயமாக
நீங்கள் வாக்களிக்கப்
படுவதெல்லாம்
உண்மையேயாகும்.
[51:6]
அன்றியும், (நன்மை, தீமைக்குரிய)
கூலி வழங்குவதும்
நிச்சயமாக நிகழ்வதேயாகும்.