[51:7]
அழகு
நிரம்பிய வானத்தின்
மீது சத்தியமாக!
[51:8]
நீங்கள்
(குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட
பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.
[51:9]
அ(வ்
வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன்
(இப்பொழுதும்)
திருப்பப்படுகிறான்.
[51:10]
பொய்
சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.
[51:11]
வர்கள்
எத்தகையோரென்றால் மடமையினால்
மறதியில் இருக்கின்றனர்.
[51:12]
(நன்மை, தீமைக்குக்) "கூலி
கொடுக்கும் நாள்
எப்போது வரும்?"
என்று
அவர்கள் கேட்கின்றனர்.
[51:13]
நெருப்பிலே
அவர்கள் சோதிக்கப்படும்
நாளாகும் அது
(என்று நபியே! நீர்
கூறும்).
[51:14]
உங்களுடைய
சோதனையைச் சுவைத்துப்
பாருங்கள், எதனை
நீங்கள் அவசரப்படுத்திக்
கொண்டிருந்தீர்களோ, இதுதான்.
[51:15]
நிச்சயமாக
பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்)
சோலைகளிலும், நீரூற்றுகளிலும்
இருப்பார்கள்.
[51:16]
அவர்கள்
தங்களிறைவன் அவர்களுக்கு
அளித்ததை (திருப்தியுடன்)
பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக
அவர்கள் இதற்கு
முன்னர் நன்மை
செய்வோராகவே இருந்தனர்.
[51:17]
அவர்கள்
இரவில் மிகவும்
சொற்ப நேரமேயன்றித்
தூங்கமாட்டார்கள்.
[51:18]
அவர்கள்
விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின்
போது இறைவனிடம்)
மன்னிப்புக் கோரிக்
கொண்டிருப்பார்கள்.
[51:19]
அவர்களுடைய
செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும்
பாத்தியதை உண்டு.
[51:20]
உறுதியாக
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
பூமியில் (பல) அத்தாட்சிகள்
இருக்கின்றன.
[51:21]
உங்களுக்குள்ளேயும்
(பல) அத்தாட்சிகள்
இருக்கின்றன, (அவற்றை)
நீங்கள் உற்று
நோக்க வேண்டாமா?
[51:22]
அன்றியும்
வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்)
நீங்கள் வாக்களிக்கப்
பட்டவையும் இருக்கின்றன.
[51:23]
ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின்
இறைவன் மீது ஆணையாக!
நீங்கள் பேசிக்
கொண்டிருப்பது
உங்கள் வார்த்தையாக
இருப்பது போன்று
இது பிரத்தியட்சமான
உண்மையாகும்.
[51:24]
இப்றாஹீமின்
கண்ணியம் மிக்க விருந்தினர்களின்
செய்தி உமக்கு
வந்ததா?
[51:25]
அவர்கள், அவரிடம்
பிரவேசித்த போது, (அவரை
நோக்கி; "உங்களுக்கு) "ஸலாம்' என்று
கூறினார்கள்; (அதற்கவர்), "(உங்களுக்கு) "ஸலாம்" என்று
கூறினார். "இவர்கள்
(நமக்கு) அறிமுகமில்லா
சமூகத்தாராக (இருக்கின்றார்களே"
என்று எண்ணிக் கொண்டார்).
[51:26]
எனினும்
அவர் தம் குடும்பத்தாரிடம்
விரைந்து சென்று, ஒரு கொழுத்த
காளைக் கன்றை(ப்
பொறித்துக்) கொண்டு
வந்தார்.
[51:27]
அதை
அவர்கள் முன் வைத்து, "நீங்கள்
புசிக்க மாட்டீர்களா?" என்று
கூறினார்.
[51:28]
(அவர்கள்
அதைப் புசிக்காததால்,) அவருக்கு
இவர்களைப் பற்றி
உள்ளூர ஓர் அச்சம்
ஏற்படடது, "(இதனை அறிந்த)
அவர்கள், பயப்படாதீர்!" எனக் கூறினார்; அன்றியும், அவருக்கு
அறிவு மிக்க புதல்வர்
(பிறப்பார்) என்று
நன்மாராயங் கூறினர்.
[51:29]
பின்னர்
இதைக்கேட்ட அவருடைய மனைவியார்
சப்தமிட்டவராக
(அவர்கள்) எதிரில்
வந்து, தம் முகத்தில்
அடித்துக் கொண்டு "நான்
மலட்டுக் கிழவியாயிற்றே!" என்று
கூறினார்.
[51:30]
(அறிவு
மிக்க புதல்வர் பிறப்பார்
என்று;) "இவ்வாறே
உம் இறைவன் கூறினான்,
நிச்சயமாக
அவன் ஞானம் மிக்கவன்;
(யாவற்றையும்,)
நன்கறிந்தவன்"
என்று
கூறினார்கள்.