[51:31]
(பின்னர்
இப்றாஹீம்;) "தூதர்களே! உங்களுடைய
காரியம் என்ன?" என்று
வினவினார்.
[51:32]
குற்றவாளிகளான
ஒரு சமூகத்தினர் பால்
நாங்கள் நிச்சயமாக
அனுப்பப்பட்டிருக்கிறோம்
என்று அவர்கள்
கூறினார்கள்.
[51:33]
அவர்கள்
மீது (சுட்ட) களிமண்
கற்களை எறிவதற்காக
(நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)-
[51:34]
வரம்பு
மீறியவர்களுக்காக
உங்கள் இறைவனிடம்
(அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை."
[51:35]
ஆகவே
அவ்வூரில் இருந்த முஃமின்களை
(முதலில்) நாம்
வெளியேற்றி விட்டோம்.
[51:36]
எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து
ஒரு வீட்டாரைத்
தவிர, ஒருவரையும்
நாம் காணவில்லை.
[51:37]
நோவினை
தரும் வேதனையை அஞசுகிறார்களே
அவர்களுக்கு நாம்
இதில் ஓர் அத்தாட்சிளை
விட்டு வைத்தோம்.
[51:38]
மலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும்
ஓர் அத்தாட்சி
இருக்கிறது நாம்
அவரைத் தெளிவான
ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில்
அனுப்பிய போது
[51:39]
அவன்
தன் (ஆட்சி, செல்வம், படைகள்
ஆகியவற்றின்) வல்லமையின்
காரணமாக (அவரைப்)
புறக்கணித்து; "இவர்
ஒரு சூனியக்காரர், அல்லது
பைத்தியக்காரர்" என்று
கூறினான்.
[51:40]
ஆகவே, நாம்
அவனையும், அவனுடைய படைகளையும்
பிடித்து அவர்களைக்
கடலில் எறிந்தோம்; அவன்
நிந்தனைக்கும்
ஆளாகி விட்டான்.
[51:41]
இன்னும், 'ஆது' (சமூகத்தாரிலும்
ஒரு படிப்பினை
இருக்கிறது); நாம்
அவர்கள் மீது
(நாசம் விளைவிக்கக்
கூடிய) மலட்டுக்
காற்றை அனுப்பியN போது
[51:42]
(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம்
தூள் தூளாக்காமல்
விடவில்லை.
[51:43]
மேலும்
'ஸமூது' (சமூகத்தாரிலும்
ஒரு படிப்பினை
இருக்கிறது); "ஒரு காலம்
சுகம் அனுபவியுங்கள்" என்று
அவர்களுக்குக்
கூறப்பட்டபோது
[51:44]
அவர்கள்
தங்கள் இறைவனுடைய கடடளையை
மீறினார்கள்; அவர்கள்
பார்த்துக் கொண்டிருக்கும்
நிலையிலேயே (நில நடுக்கம்
பேரிடி போன்ற)
பயங்கரமான பெரும்
சப்தம் அவர்களைப்
பிடித்துக் கொண்டது.
[51:45]
ஆகவே, அவர்கள்
நிற்கவும் சக்தி பெற்றார்களில்லை
(எத்தகைய) உதவியும்
பெற்றுக் கொள்ள
முடியாதவர்களா(க
மடிந்து) போயினர்.
[51:46]
அன்றியும், இவர்களுக்கு முன்னால்
நூஹுடைய சமூகத்தாரையும்
(நினைவூட்டுவீராக); நிச்சயமாக
அவர்கள் பாவம் செய்யும்
சமூகத்தாராகவே
இருந்தார்கள்.
[51:47]
மேலும், நாம்
வானத்தை (நம்) சக்திகளைக்
கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக
நாம் விரிவாற்றலுடையவராவோம்.
[51:48]
இன்னும், பூமியை
- நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு
விரிப்பவர்களில்
நாமே மேம்பாடுடையோம்.
[51:49]
நீங்கள்
சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக
ஒவ்வொரு பொருளையும்
ஜோடி ஜோடியாக நாம்
படைத்தோம்.
[51:50]
ஆகவே, அல்லாஹ்வின்
பக்கம் விரைந்து
செல்லுங்கள்; நிச்சயமாக, நான்
அவனிடமிருந்து
உங்களுக்குத்
தெளிவாக அச்சமூட்டி
எச்சரிக்கை செய்பவனாகவே
இருக்கின்றேன்
(என்று நபியே! நீர் கூறுவீராக).
[51:51]
மேலும், அல்லாஹ்வுடன்
வேறு நாயனை
(இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான்
அவனிடமிருந்து
உங்களுக்குத் தெளிவாக
அச்சமூட்டி எச்சரிக்கை
செய்பவனாகவே -
இருக்கின்றேன்
(என்றும் கூறும்).