[52:32]
அல்லது, அவர்களுடைய
புத்திகள் தாம்
அவர்களை இவ்வா(றெல்லாம்
பேசுமா)று ஏவுகின்றனவா? அல்லது
அவர்கள் வரம்பு மீறிய
சமூகத்தாரா?
[52:33]
அல்லது, இ(வ்வேதத்)தை
நீர் இட்டுக்
கட்டினீர் என்று
அவர்கள் கூறுகின்றனரா? அல்ல.
அவர்கள் ஈமான்
கொள்ள மாட்டார்கள்.
[52:34]
ஆகவே, (இவ்வாறெல்லாம்
கூறும்) அவர்கள்
உண்மையாளர்களாக
இருந்தால், இ(வ்வேதத்)தைப்
போன்ற ஒரு செய்தியை
அவர்கள் கொண்டு
வரட்டும்.
[52:35]
அல்லது, அவர்கள்
எந்தப் பொருளின்றியும்
(தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது
அவர்கள் (எதையும்)
படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
[52:36]
அல்லது, வானங்களையும் பூமியையும்
அவர்கள் படைத்தார்களா? அல்ல.
அவர்கள் உறுதி
கொள்ளமாட்டார்கள்.
[52:37]
அல்லது, அவர்களிடம்
உம்முடைய இறைவனின்
பொக்கிஷங்கள்
இருக்கின்றனவா? அல்லது
இவர்கள் தாம்
(எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா?
[52:38]
அல்லது, அவர்களுக்கு
ஏணி இருந்து
அதன் மூலம் (வானத்தின்
இரகசியங்களை) கேட்டு
வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில்
கேட்டு வந்தவர்
செவியேற்றதைத்
தெளிவான ஆதாரத்துடன் கொண்டு
வரட்டும்.
[52:39]
அல்லது, அவனுக்குப்
பெண் மக்களும்
உங்களுக்கு ஆண்
மக்களுமா?
[52:40]
அல்லது, நீர்
அவர்களிடம் ஏதாவது
கூலி கேட்டு, (அதைக்
கொடுத்ததினால்)
அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா,
[52:41]
அல்லது, அவர்களிடம்
மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை
அவர்கள் எழுதுகின்றார்களா,
[52:42]
அல்லது, அவர்கள்
(உமக்கு எதிராக)
ஏதாவது சூழ்ச்சி
செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த
காஃபிர்கள் தாம்
சூழச்சிக்குள்ளாவார்கள்.
[52:43]
அல்லது, அவர்களுக்கு
அல்லாஹ் அல்லாமல்
(வேறு) நாயன் இருக்கின்றானா, அவர்கள்
இணை வைப்பதை விட்டும்
அல்லாஹ் மிகத்
தூயவன்.
[52:44]
வானத்திலிருந்து
ஒரு துண்டு விழுவதை
அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான
மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள்.
[52:45]
ஆகவே
அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும்
நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை
விட்டு விடுவீர்களாக.
[52:46]
அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள்
எதுவும் அவர்களுக்குப்
பயன் அளிக்காது, அன்றியும்
(எவராலும்) அவர்கள்
உதவி செய்யப்படவும்
மாட்டார்கள்.
[52:47]
அன்றியும், அநியாயம்
செய்து கொண்டு
இருந்தவர்களுக்கு
நிச்சயமாக மற்றொரு
வேதனையும் (இம்மையில்)
உண்டு எனினும் அவர்களில்
பெரும்பாலோர்
இதை அறிய மாட்டார்கள்.
[52:48]
எனவே
(நபியே!) உம்முடைய இறைவனின்
தீர்ப்புக்காகப்
பொறுத்திறுப்பீராக, நிச்சயமாக
நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும்
நீங்கள் எழுந்திருக்கும்
சமயத்தில் உம்
இறைவனின் புகழைக் கூறித்
தஸ்பீஹு செய்வீராக,
[52:49]
இன்னும், இரவின்
ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள்
அடையும் நேரத்திலும்
அவனைத்(துதி செய்து)
தஸ்பீஹு செய்வீராக!