An-Najm
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[53:1]
விழுகின்ற
நட்சத்திரத்தின் மீது
சத்தியமாக!
[53:2]
உங்கள்
தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர்
தவறான வழியில்
செல்லவுமில்லை.
[53:3]
அவர்
தம் இச்சைப்படி
(எதையும்) பேசுவதில்லை.
[53:4]
அது
அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி
வேறில்லை.
[53:5]
மிக்க
வல்லமையுடைவர் (ஜிப்ரயீல்)
அவருக்குக் கற்றுக்
கொடுத்தார்.
[53:6]
(அவர்)
மிக்க உறுதியானவர், பின்னர்
அவர் (தம் இயற்கை
உருவில்) நம் தூதர்
முன் தோன்றினார்.
[53:7]
அவர்
உன்னதமான அடி வானத்தில் இருக்கும்
நிலையில்-
[53:8]
பின்னர், அவர்
நெருங்கி, இன்னும், அருகே
வந்தார்.
[53:9]
(வளைந்த)
வில்லின் இரு முனைகளைப்
போல், அல்லது அதினும்
நெருக்கமாக வந்தார்.
[53:10]
அப்பால், (அல்லாஹ்)
அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம்
அவர், அவனுடைய அடியாருக்கு
(வஹீ) அறிவித்தார்.
[53:11]
(நபியுடைய)
இதயம் அவர் கண்டதைப்
பற்றி, பொய்யுரைக்க
வில்லை.
[53:12]
ஆயினும், அவர்
கண்டவற்றின் மீது
அவருடன் நீங்கள்
தர்க்கிக்கின்றீர்களா?
[53:13]
அன்றியும், நிச்சயமாக
அவர் மற்றொரு
முறையும் (ஜிப்ரயீல்)
இறங்கக் கண்டார்.
[53:14]
ஸித்ரத்துல்
முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள)
இலந்தை மரத்தருகே.
[53:15]
அதன்
சமீபத்தில் தான் ஜன்னத்துல்
மஃவா என்னும் சுவர்க்கம்
இருக்கிறது.
[53:16]
ஸித்ரத்துல்
முன்தஹா என்னும் அம்மரத்தை
சூழ்ந்து கொண்டிருந்த
வேளையில்,
[53:17]
(அவருடைய)
பார்வை விலகவுமில்லை, அதைக்
கடந்து (மாறி) விடவுமில்லை.
[53:18]
திடமாக, அவர்
தம்முடைய இறைவனின்
அத்தாட்சிகளில்
மிகப் பெரியதைக்
கண்டார்.
[53:19]
நீங்கள்
(ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும்
கண்டீர்களா?
[53:20]
மற்றும்
மூன்றாவதான "மனாத்"தையும்
(கண்டீர்களா?)
[53:21]
உங்களுக்கு
ஆண் சந்ததியும், அவனுக்குப்
பெண் சந்ததியுமா?
[53:22]
அப்படியானால், அது மிக்க அநீதமான
பங்கீடாகும்.
[53:23]
இவையெல்லாம்
வெறும் பெயர்களன்றி
வேறில்லை, நீங்களும்
உங்கள் மூதாதையர்களும்
வைத்துக் கொண்ட
வெறும் பெயர்கள்!
இதற்கு அல்லாஹ்
எந்த அத்தாட்சியும்
இறக்கவில்லை, நிச்சயமாக
அவர்கள் வீணான
எண்ணத்தையும், தம் மனங்கள்
விரும்புபவற்றையுமே
பின் பற்றுகிறார்கள், எனினும்
நிச்சயமாக அவர்களுடைய
இறைவனிடமிருந்து, அவர்களுக்கு
நேரான வழி வந்தே இருக்கிறது.
[53:24]
அல்லது, மனிதனுக்கு
அவன் விரும்பியதெல்லாம்
கிடைத்து விடுமா?
[53:25]
ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே
சொந்தம்.
[53:26]
அன்றியும்
வானங்களில் எத்தனை மலக்குகள்
இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ்
விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன்
அனுமதி கொடுக்கின்றானோ
அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும்
எந்தப் பயனுமளிக்காது.